பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை வலியதும் எளியதும் இரண்டு பொருள்கள் சேர்ந்தால் வலிய பொருள் எளிய பொருளைத் தன் வசம் ஆக்கிவிடும். எண்ணிக்கை எப்படி யானாலும் உரத்தைப் பொறுத்து இந்த மாற்றம் நிகழும். ஒரு கலம் பாலில் சிறிதளவு மோர் கலந்தாலும் பால் முழுவதையும் திரியச் செய்துவிடும். பாலைவிட மோர் உரமுடையது. ஆனால் பாலில் நீர் கலந்தால் பாலாகவே நிற்கிறது. மனவலியுடையவர் கள் பெருங் கூட்டத்தைச் சேர்ந்தாலும் கூட்டம் முழுவதையும் தம் வயமாக்கி விடுவார்கள். நாம் மனத்திண்மை இல்லாதவர் களாதலின் சேர்ந்த இனத்திற்கு ஏற்ப மாறி விடுகிறோம். தொண்டர் கூட்டத்திற் சேர்ந்தால் அவர் போக்கை நாம் மாற்ற முடியாது. சாக்கடை கங்கையை அழுக்காக்க முடியுமா னால், ஆனை கடலைக் கலக்க முடியுமானால், நாம் தொண்டர் களைக் குழப்பலாம்; மாற்றலாம். அதற்கு நம்மிடம் உரம் இல்லை. ஆகவே தொண்டர் கூட்டத்திலே சேர்ந்தவுடன் நம்மை அறியாமலே நம்மிடம் ஒரு மாற்றம் நிகழ்கிறது. நாம் பழைய இயல்பினின்றும் மாறித் தொண்டர்களின் நல்ல பண்புகளை மேற்கொள்கிறோம். இறைவன் திருநாமத்தைச் சொல்லும் பழக்கம் நமக்கு இல்லாவிட்டாலும் தொண்டர்கள், அரோகரா’’ என்று முழங்கும்போது நாமும் முழங்குகிறோம். அவர்கள் அசைந்து ஆடும்போது நாமும் ஆடுகிறோம். அசையாமல் மெளனமாக இருக்கும்போது நாமும் அப்படியே இருக்கிறோம். 'முன்பு நாம் இருந்த நிலைக்கும் இப்போது உள்ள நிலைக் கும், மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ளது போன்ற வேறு பாடு இருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, "நாமா இப்படி ஆனோம்' என்ற வியப்பு உண்டாகிறது. நாம் ஆகிறதாவது தொண்டர் கூட்டம் நம்மை அப்படி ஆக்கிவிட்டது. அந்தக் கூட்டத்தில் சேர நமக்குத் தகுதி இல்லாவிட்டாலும், முருகன் திருவருள் செய்தான்; தொண்டரோடு கூட்டுவித்தான். அப்படி அவன் செய்ததுதான் ஆச்சரியம். - இத்தகைய எண்ணங் கள் உள்ளத்தே பொங்கி வந்ததனால் அருணகிரியார், அன்பால் கெடுதல் இலாத் தொண்டரிற் கூட்டியவா! என்று வியப்படைகிறார். 337