பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 தொண்டர்களின் இயல்பு தொண்டர்களைச் சுட்டும்போது, அன்பால் கெடுதல் இலாத் தொண்டர் என்று சொல்கிறார். அவர்களுக்கு எந்தவித மான கேடும் இல்லை. அவர்களிடம் உள்ள அன்பே அதற்குத் காரணம். 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை” என்று பெருமிதம் கொள்பவர்கள் அவர்கள். தனு கரணபுவன போகங்களை இறைவன் நமக்கு வழங்கியிருக்கிறான். அன்பு என்னும் பண்பு இருந்தால் இவ்வளவும் நமக்கு நலம் தரும். அது இல்லையானால் இவ்வளவும் நமக்கு மேலும் மேலும் ஆசையை உண்டாக்கிக் கேடு அடையச் செய்யும். 'அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று' என்பார் திருவள்ளுவர். வாழ்க்கையில் பசுமை வேண்டுமானால் அன்பு வேண்டும். அன்பிலே சிறந்தது இறைவன்பால் கொண்ட அன்பு. அதுவே வாழ்க்கையின் மலர். அதன்பின் இறையருளநுபவ மாகிய கனியைப் பெற வேண்டும். உயிர் வாழ்க்கை வீணாகாமல் இருக்க வேண்டுமானால் அன்பு பெருக வேண்டும். 'அன்பைப் பெருக்கிஎன் ஆருயிரைக் காக்கவந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே” என்று தாயுமானவர் கூறினார். ஆருயிரைக் காக்கும் ஆற்றல் அன்புக்குத்தான் உண்டு. எல்லா வகையான கேடுகளும் அன்பு இன்மையால் உண்டாகின்றன. அன்பு பெருகினால் கெடுதல் இன்றி ஒழியும். ஆதலின் தொண்டர்களை, அன்பால் கெடுதல் இலாத் தொண்டர் என்று அருணகிரி முனிவர் சொன்னார். தொண்டர்கள் அன்பை வளர்த்துக் கேடுகளினின்றும் நீங்கின வர்கள். நாமோ அன்புக்கு மாறான பற்றையும் லோபத்தையும் வளர்த்து அஞ்ஞானிகளாக இருக்கிறோம். இரண்டு வகையின ருக்கும் எத்தனையோ காத தூரம். இரு வகையினரும் நேர் எதிர் 333