பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை திக்கை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். அவர்கள் வடக்கை நோக்கிப் போகிறார்கள்; நாம் தெற்கை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். நமக்கும் அவருக்கும் இடையில் உள்ள தூரம் வரவர அதிகமாகிறதேயன்றிக் குறையவில்லை. அப்படி உள்ளவரை முருகன் தொண்டரோடு கூட்டினான். அன்பை வளரச் செய்தான். பற்றுள்ளமும் அறியாமையும் மெல்ல மெல்லப் போகச் செய்தான். இவ்வாறு செய்தவன் எத்தகைய ରy6୪T? கிரெளஞ்ச சங்காரம் கிரெளஞ்ச வெற்பை அடுதலைச் சாதித்த வேலோன். ஆண்டவன் தன் திருக்கரத்தில் வேலை வைத்திருக்கிறான். அது ஞானசக்தி. ஞானம் அஞ்ஞானத்தைப் போக்கிவிடும். மலை உருவம் கொண்ட அசுரனை அந்த வேல் அழித்தது. கிரெளஞ்சம் என்பது அன்றிற் பறவைக்குப் பெயர். ஆணும் பெண்ணும் இணை பிரியாமல் வாழ்வது அன்றிலின் இயல்பு. அன்பின் உருவம் அது என்றே சொல்லிவிடலாம். அத்தகைய பறவையின் உருவத்தைக் கொண்டமையால் கிரெளஞ்ச கிரி என்று பெயர் வந்தது. 'குருகு பெயர்க் குன்றம்' என்று தமிழில் பாடியிருக்கிறார்கள். உருவம் அன்புக்கு எடுத்துக் காட்டாகிய அன்றிலைப் போல இருந்தாலும் உள்ளம் கல் போன்றது; இரக்கம் இல்லாதது; மலைதானே? தாமரையைப் போலக் கல்லிலே வடித்து வண்ணம் தீட்டினால் அது கண்ணுக்குத் தாமரையாகத் தோற்றம் தரலாம். ஆனால் தொட்டுப் பார்த்தால் மென்மையாக இருக்குமா? பாறையைத் தொட்டால் எப்படி வன்மையாக இருக்குமோ அதே வன்மையைத் தான் அதிகம் உணரலாம். அன்றில் உருவம் கொண்ட அசுரன் கல்லாக, மலையாக அன்பு இல்லாமல் இரக்கம் இல்லாமல் இருந்தான். அன்றிலைப் போலவே பறக்கும் ஆற்றல் அவனுக்கு இருந்தது. ஆனால் அந்த ஆற்றலால் அவன் செய்த கொடுமை மிகுதியாயிற்று. பறந்து சென்று திடீரென்று எங்கேனும் இறங்கி அங்குள்ள மக்களையெல்லாம் அழுத்தி அழித்து விடுவான். பசுத்தோல் போர்த்த புலியைப் போலக் கொண்ட வேடத்துக்கு மாறான கொடுமைகளைப் புரிந்தான். அவனை முருகன் வேல் 339