பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 எறிந்து கொன்றான். கொடுமையையும் அன்பின்மையையும் வேல் அழித்தது. 'பொல்லாதவர்களை அழிப்பதற்கென்றே கையில் வேலை ஏந்தி நிற்கிறவன் முருகன். நான் பொல்லாதவனாக இருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் என்னை நல்ல வழியில் சேர்த்து விட்டான். இதுவும் ஓர் ஆச்சரியந்தான். ‘என்னை நானே திருத்திக் கொண்டிருக்கலாம். அது எளிய காரியம் அன்று என்று எண்ணி, எனக்கு எந்தப் பொறுப்பும் இல்லாத வகையில், எனக்கு நன்மை வரும்படி அருளிவிட்டான். என்னைத் தொண்டர் கூட்டத்திற் சேர்த்துவிட்ட பிறகு என் முன்னேற்றத்தைப் பற்றி நான் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஒருவர் இருவரானால் அவர்களை விட்டு விலகிப் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பெருங்கூட்டத்துக்கு நடுவே இழுத்துப் பொருத்திவிட்டமையால், எப்படி விலகிச் செல்ல முடியும்?" . சத்சங்கம் அடியார் கூட்டுறவு எளிதிலே நம்மை உய்விக்கும். 'சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர்குழாம் சாரில் கதியன்றி வேறிலை காண்' என்று முன்பும் இந்தச் சத்சங்கத்தைப் பற்றி அருணகிரியார் சொல்லியிருக்கிறார். அடியார் நடுவே இருக்கும் பேறு கிடைத்து விட்டால் பக்குவ வகைகள் யாவும் ஒவ்வொன்றாக நம்மை வந்து அடையும். 'உடையாள் உன்றன் நடுஇருக்கும்; உடையாள் நடுவுள் நீஇருத்தி; அடியேன் நடுவுள் இருவிரும் இருப்ப தானால், அடியேன்உன் அடியார் நடுவுள் இருக்கும்அரு ளைப்புரி யாய்;பொன் னம்பலத்தெம் முடியா முதலே, என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே.” என்பது திருவாசகம். தாயுமானவரோ, 340