பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை 'அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே.” என்று வேண்டுகிறார். 'இந்த அரிய சேர்க்கையை முருகன் செய்வித்தான். நானே முயலாமல், அவனே என்னைக் காப்பாற்ற இதுதான் வழி யென்று திருவுள்ளங்கொண்டு சேர்ப்பித்தான். அதன் பயன் என்ன தெரியுமா? தொண்டர் கூட்டத்தினால் விளைந்த பயனை மேலே சொல்லுகிறார். சிறையினின்றும் விடுதலை பிறவிஅற, இச்சிறை விடுதலைப் பட்டது; விட்டது பாச வினைவிலங்கே. சிறையில் ஒருவன் அடைபட்டிருக்கிறான். அவன் ச -ல் களில் தளை பூட்டியிருக்கிறார்கள். எப்போதுமே ஒரே சிறையில் அவனை வைத்திருப்பதில்லை. ஆறு மாதம், ஒரு வருஷம், இரண்டு வருஷம் என்று வெவ்வேறு சிறைக்கு மாற்றிக் கொண் டிருக்கிறார்கள். இடம் மாறினாலும் சிறை வாழ்க்கை மாறுவ தில்லை. சிறை வாசத் தண்டனைக் காலத்தில் காலிலும் கையிலும் விலங்குகளுடனும் பல சிறைகளை அவன் பார்த்துவிட்டான். அவனுக்கு விடுதலை கிடைக்கிறது. முதலில் அவனுடைய தளைகளை அகற்றி விடுகிறார்கள். பிறகு சிறையினின்றும் வெளியே அனுப்பிவிடுகிறார்கள். இனிமேல் வேறு எந்தச் சிறைக் கூடத்துக்கும் போக வேண்டியதில்லை. அவனோடு பழகியவன் ஒருவன் அவனைச் சந்திக்கிறான். அவன் சிறையில் வாடியதை அறிந்தவன் அவன். 'என்ன அப்பா, சமாசாரம்?' என்று வியப்புடன் சிறையில் இருந்தவனை அவன் கேட்கிறான். அவன், "எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது” என்று சொல்கிறான். 'சென்னைச் சிறையில் இருந்தாயே!” என்று பழகியவன் கேட்கிறான். 'அதை விட்டு வெளியே வந்துவிட்டேன்' என்கிறான். க.சொ.V1-22 341