பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 'பாவம் உன் கையில் விலங்கு போட்டிருந்தார்களே: என்று வெளியில் வாழ்பவன் கேட்கிறான். 'ஆம் ; விலங்குகளை எடுத்துவிட்டார்கள்' என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறான். விலங்கை எடுத்ததும் சிறையினின்றும் வெளிவிட்டதும் விடுதலைக்குரிய செயல்கள். 'விலங்கைத் தறித்தார்கள்; இந்தச் சிறைக்கு வெளியே கொண்டு வந்தார்கள்; இனி இந்த விடுதலை உனக்கு நிரந்தரமானது; வேறு சிறைக்குப் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்' என்று சொன்னால் நிகழ்ச்சிகள் நடந்த முறையில் சொல்வதாக இருக்கும். அவனோ நிரந்தர விடுதலையை அடைந்த மகிழ்ச்சியில் அதையே முதலில் சொல்கிறான். சொல்லும் முறை ஒருவனுக்குப் பல இடங்களில் கடன் இருந்தது. சில்லறை யாகவும் பெருந்தொகையாகவும் பல பேரிடம் கடன் வாங்கி யிருந்தான். அதனால் மிகவும் இடர்ப்பட்டான். எப்படியோ முயற்சி செய்து தொழில் நடத்தி வெவ்வேறு யுக்தி செய்து கடனை எல்லாம் அடைத்து விட்டான். அவன் இடர்ப்பட்ட போது பார்த்த நண்பன் வேற்றுர் சென்று பல ஆண்டுகளுக்குப் பின் ஊர் வந்தான்; 'இப்போது எப்படியப்பா இருக்கிறாய்?" என்று கேட்கிறான். அவன், 'கடனை யெல்லாம் தீர்த்து விட்டேன்' என்று தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்வான். பிறகே கடனினின்றும் விடுதலை அடைவதற்கு முன் நிகழ்ந்த வற்றை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்வான். இந்தப் பாட்டில் அருணகிரியார் தமக்கு உண்டான இன்பத்தை, தாம் பெற்ற பேற்றை, இவ்வண்ணந்தான் சொல்கிறார். காரணத்தை முதலில் சொல்லிப் பிறகு காரியத்தைச் சொல்வது பெரும்பா லான முறை. மகிழ்ச்சி நிறைவில் இந்த முறை மாறும். காரி யத்தை அல்லது விளைவை முன்பு சொல்லிப் பிறகு காரணத்தைச் சொல்லத் தோன்றும். ஒரு கோயிலுக்குள் போவதற்கு முன் முதலில் திருவாசலும், பிறகு மகா மண்டபமும், பிறகு அர்த்த மண்டபமும், அப்பால் கர்ப்பக் கிருகமும் தோன்றும். உள்ளே 342