பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை போனவன் திரும்பிப் பார்த்தால் முதலில் கர்ப்பக்கிருகமும், பிறகு அர்த்த மண்டபமும், பின்பு மகா மண்டபமும், அப்பால் திருவாசலும் தோன்றும். அடைய வேண்டிய இடத்தை அடைந்த அருணகிரிநாதர் இப்போது திரும்பிப் பார்த்துச் சொல்கிறார். நிகழ்ந்த முறை என்ன? முதலில் விலங்கு போயிற்று; பிறகு சிறை விட்டது; அப்பால் எந்தச் சிறையிலும் வாசம் செய்யாத நிலை வந்தது, இதுதான் நிகழ்ந்த முறை, கூறும் முறையோ ஆனந்தாதிசயப் பெருக்கினால் நேர்மாறாக இருக்கிறது. சிறை வாசமே அற்றுப் போனதைச் சொல்லி, அதற்குமுன் இருந்த சிறையை விட்டதை அப்பால் சொல்லி, விலங்கு அறுந்ததைக் கடைசியில் சொல்கிறார். பிறவி அற, இச்சிறை விடுதலைப் பட்டது; விட்டது பாச வினைவிலங்கே. ' பிறவி அற்றது, சிறைவாசம் நிரந்தரமாக நீங்கிய இன்பம்; முடிந்த முடிபு. இச்சிறை விடுதலைப்பட்டது, கடைசியாக இருந்த சிறையினின்றும் வெளிப்பட்டது. பாச வினைவிலங்கு விட்டது என்பதே தளை அற்ற நிலை. இனிமேல் பிறவாத நிலைதான் மோட்சம். "மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே' என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். கள்ளப்புலக்குரம்பை என்றது இப்போது நாம் வாழும் உடம்பு. இதுபோன பிறகு மறுபடியும் இங்கு வாராத நிலை வரவேண்டும். பிறவிகள் மேலும் மேலும் உண்டாவதற்கு வினையே காரணம். வினைபோக, உடல்போக, பிறவி போக வேண்டும். தொண்டர் கூட்டத்தில் முருகன் கூட்டுவித்ததனால் இவை நிகழ்ந்தன. வினை நீக்கம் முதலில் பாசத்தினால் உண்டான வினைகள் ஒழிந்தன. வினைகள் இரண்டு வகையானாலும் வினை என்னும் பொதுமை யினால் 'விட்டது என்று ஒருமையாகச் சொன்னார். தொண்டர் கூட்டத்தின் முதல் விளைவு இது. 343