பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 இடையீடு படாத பேரின்பம். அடுத்தடுத்துச் சிறை போன்ற உடம்பில் புகுவதைத்தான் பிறவி என்று சொல்கிறோம். இந்த உடம்பாகிய சிறை போனதோடு நிற்கவில்லை; இனி வேறு உடம்புகளில் புகும் பிறவித் துன்பமே அற்று விட்டதாம். 'பிறவார் உறுவது பெரும்பேரின்பம்" என்பது மணிமேகலை. அந்தப் பேரின்ப நிலையே முடிந்த முடிபு. அது கிடைத்துவிட்டது. பிறவி அற. வினைகள் போயின; அதன் பயனாக உடம்பென்னும் சிறை விட்டது; அப்பால் பிறவியே அடியோடு இல்லையாயிற்று. இது காரண காரிய முறை. இதை மாற்றி ஆனந்தத்தினால் உண்டான வியப்புணர்ச்சியில் மூழ்கிய அருணகிரியார் காரியத்தை முன் வைத்துக் காரணத்தைப் பின்வைத்துக் காரியகாரண முறையில் சொல்கிறார். பிறவி அற, இச்சிறை விடுதலைப் பட்டது; விட்டது பாசவினை விலங்கே. இலக்கண சமாதானம் "இந்தப் பாட்டை இந்த உலக வாழ்வில் இருந்து கொண்டே பாடினார் அருணகிரிநாதர். 'உடம்பாகிய சிறை விட்டுவிட்டது. என்று சொல்கிறாரே! அது எப்படிப் பொருந்தும்?' என்ற ஐயம் இங்கே தோன்றலாம். துணிவு பற்றி எதிர்காலத்தை இறந்த காலத்தில் கூறும் வழக்கு ஒன்று தமிழில் உண்டு. 'அங்கே போனாயோ, தொலைந்தாய்' என்று சொல்வதைக் கேட்டிருக் கிறோம். இது எதிர்காலத்தில் நிகழப் போவது துணிவு என்பதை எண்ணிச் சொல்வது. அப்படி வினைவிலங்கு விடுவதும், உடற் சிறையினின்றும் விடுதலை பெறுவதும், பிறவி அறுவதும் உறுதியானமையால் இப்படிச் சொன்னார் என்று, இலக்கணத்தை ஆதாரமாகக் காட்டிச் சமாதானம் சொல்லிவிடலாம். ஜீவன் முக்தி இந்த இடத்தில் அப்படிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. முக்தியின்பத்தை இந்த உடம்போடு வாழும் போதே 346