பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை பெறலாம் என்பது, இந்த நாட்டிலுள்ள பெரியோர்களின் துணிபு. அந்த நிலையை ஜீவன் முக்தி என்று சொல்வார்கள். இந்த உடம்பில் இருந்து வாழ்ந்தாலும் சரீராபிமானம் இல்லாமல் வாழும் நிலை அது. புளியங்காயில் ஒடு வேறு காய் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாது. உள்ளே உள்ள பகுதியும் மேற் பகுதியும் இணைந்து ஒட்டியே இருக்கும். காய் பழுத்துப் பழம் ஆனால் ஒட்டுக்குள்ளே பழம் இருந்தாலும் இரண்டுக்கும் ஒட்டுறவு இராது. தேங்காயில் நீர் வற்றி உள்ளே உள்ள பருப்பு நன்றாகக் காய்ந்து கொப்பரையாகிவிட்டால் ஒட்டுக்கும் அதற் கும் சம்பந்தமே இராது. ஆட்டிப் பார்த்தால் கொப்பரை தனியே குடுகுடுவென்று ஆடும் ஒலி கேட்கும். ஜீவன் முக்தர்கள் இந்த உடம்பில் ஒட்டாமல், இந்திரிய வசப்படாமல், தாமரை இலைத் தண்ணீர்போல் இருப்பார்கள். இந்த உடம்பில் இருக்கும்போதே அவர்கள் வினைவிலங்கு தறிக்கப் பெற்றவர்களாய், சரீர அபிமானம் போனவர்களாய், இனிமேல் பிறவியே இல்லாதவர்களாய்விடுகிறார்கள். விடுதலை பெற்றவன் தளை நீங்கித் தன் அறையிலிருந்து புறப்பட்டு வருகிறான். இன்னும் அவன் சிறையின் புறவாசலை அடைய வில்லை; சிறைக் கட்டிடத்துக்குள்தான் இருக்கிறான். ஆயினும் அவன் விடுதலை பெற்றவனே. அந்த நிலையில் இருப்பவர்களே ஜீவன் முக்தர்கள். சத்சங்கமும் ஜீவன் முக்தியும் இறைவன் திருவருளைப் பெற்றவர்கள் அதனால் விளைந்த பெருவிளைவாக ஜீவன் முக்தி நிலையை அடைவார்கள். அருண கிரிநாதர் சிறந்த ஜீவன் முக்தர். இறைவன் சத்சங்கத்தைச் சேரும் படி தம்மைச் செலுத்தினான்; அதனால் ஜீவன் முக்தி கிடைத்தது என்று இந்தக் கவியில் சொல்கிறார். இதே கருத்தை ஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் அருளியிருக்கிறார். “ஸத்ஸங் கத்வே நிஸ்ஸங் கத்வம் நிஸ்ஸங் கத்வே நிர்மோ ஹத்வம் நிர்மோ ஹத்வே நிச்சல த்த்வம் நிச்சல தத்வே ஜீவன் முக்தி." 347