பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 என்பது அவர் திருவாக்கு. "அன்பர்களின் உறவினாலே தனிமை கிடைக்கும்; அதனால் மோகம் அற்ற நிலை உண்டாகும்; அதனால் சலனமற்ற மோன நிலை சித்திக்கும்; அதனால் ஜீவன் முக்தி கிடைக்கும்' என்பது இதன் கருத்து. சத்சங்கமாகிய தொண்டர் உறவு ஜீவன் முக்தி யென்னும் கனியாகக் கனிந்து நலம் தரும். அருணகிரி நாதரும் தொண்டரிற் கூட்டிய பேரருளி னால் பிறவியறும் நிலை வந்ததென்று சொன்னார். நிறைவு இந்த நூறாவது பாட்டு எவ்வளவு நிறைவாக அமைந் திருக்கிறது! பிறவி அறுவது என்பதுதான் அந்த நிறைவு. பிரபஞ்சச் சேறு கழிந்ததை முதல் பாட்டில் சொன்ன அருணகிரி நாதர், பிறவிப் பிணி நீங்கிய பேரின்பத்தை இறுதிப் பாட்டில் சொல்லித் தம் மன நிறைவை வெளியிடுகிறார். வேறு எந்த நிறைவும் அப்போதைக்கு நிறைவு போலத் தோன்றிப் பின்பு குறைவுபடும். வயிறு நிறையச் சாப்பிடுகிறோம். ஆனால் சில மணி நேரங்களில் அந்த நிறைவு இருப்பதில்லை. இந்திரிய சுகங்கள் யாவுமே முழு நிறைவை அடைவன அல்ல. இறைவன் குறைவிலா நிறைவானவன். அவனோடு ஒன்றுவதே என்றும் குறையாத, என்றும் மாறாத, நிறைவான வாழ்வு. அதுதான் பரமசுகம். 'ஏக போகமாய் நீயும் நானுமாய் இறுகும்வகை பரமசுகம் அதனையருள்' என்பது திருப்புகழ். அந்தப் பரமானந்த நிறைவைச் சொல்லி அருணகிரி நாதர் என்னும் பரமோபகாரி இந்த அற்புதமான நூலை நிறைவு செய்கிறார். : Y இடுதலைச் சற்றும் கருதேனைப் போதம் இலேனை அன்பால் கெடுதல் இலாத்தொண்ட ரிற்கூட் டியவா! கிரெளஞ்சவெற்பை 343