பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன மலர் வீமன் செய்த பூசை பாரதத்தில் ஒரு கதை வருகிறது. அருச்சுனன் கைலாசத் துக்குப் போனான். தெரு வழியே போய்க் கொண்டிருக்கும்போது சிவபெருமானுக்குப் பூசை செய்த பத்திர புஷ்பங்களாகிய நிர் மாலியத்தை வண்டி வண்டியாக எடுத்துச் சென்று சிவகணத்தினர் ஓரிடத்தில் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் அது இன்னதென்று அருச்சுனனுக்குத் தெரியவில்லை. "இவை என்ன?" என்று கேட்டான். 'இவை யாவும் நிர்மாலியம். ஒரு பக்தன் சிவபெருமானைப் பூசை செய்தவை” என்றார்கள். . 'ஒரு பக்தனா இத்தனை பூவையும் பத்திரங்களையும் கொண்டு பூசித்திருக்கிறான்!” என்று வியப்பு அருச்சுனனுக்கு உண்டாயிற்று. அந்தப் பக்தன் யார் என்று தெரிந்துகொள்ளும் ஆவலும் தொடர்ந்து எழுந்தது. 'அந்தப் பக்தர் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமோ?" என்று அருச்சுனன் கேட்டான். “பூவுலகில் பஞ்ச பாண்டவர்கள் என்று இருக்கிறார்களாம். அவர்களில் மூத்தவர் தர்மபுத்திரர் என்பவராம். அவருக்கு அடுத்த தம்பியாகிய iமசேனர் என்ற பக்த சிரோமணியே இத்தனையும் பூசை பண்ணினார்." இதைக் கேட்டவுடனே அருச்சுனனுடைய வியப்புப் பன் மடங்கு மிகுதியாகிவிட்டது. 'அவர் பூசை செய்தாரா?” 'ஆம்; அதில் சந்தேகம் இல்லை.” அருச்சுனனுக்கு யோசனை படர்ந்தது. நம்முடைய வீம அண்ணா நிறையச் சாப்பிடுவார். அதில் அவருக்கு நிகர் யாரும் இல்லை. அதை நாம் அறிந்திருக்கிறோம். அவர் பூசை செய்தே நாம் பார்த்ததில்லையே! ஒருகால் பூலோகத்தில் செய்யும் பூசை இங்கே பன்மடங்காக விளையும் போலிருக்கிறது. நம்முடைய அண்ணா எப்போதாவது நாம் ஊரில் இல்லாதபோது அருச்சனை செய்திருக்கலாம். அதுவே இப்படியானால் நாம் நாள்தோறும் விடாமல் சிவபூசை செய்து வருகிறோமே; அந்த நிர்மாலியம் 23