பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை இந்தப் புத்தகத்தைக் காண அவர்கள் இல்லை. பாடல்களின் விளக்கவுரைகள் முடிந்ததற்காக வாழ்த்துக் கூற அவர்கள் இல்லை, ஆனாலும் எளியேனுடைய உள்ளத்தில் அவர்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள். இதோ அவர்கள் கண்ணொளி சுடர் வீசுகிறது. இதோ அவர்கள் சிரிப்பொலி கேட்கிறது. ஆம்! அவர்கள் ஆசி எப்போதும் என் உள்ளத்தை நிறைவாக்கி வைக்கும் என்பதில் ஐயம் இல்லை. ★ கந்தர் அலங்காரம் நூறு என்று வரையறை இருந்தாலும் ஏட்டுச் சுவடிகளில் அதிகமாக ஆறு பாடல்கள் கிடைத்தனவென்று இந்நூலை முதலில் அச்சிட்ட காலம் தொடங்கியே சொல்லி அவற்றையும் சேர்த்தே பதிப்பித்து வந்திருக்கிறார்கள். இந்த ஆறு பாடல்களின் சொற்பொருளமைதி, இவையும் அருணகிரியார் வாக்கு என்பதைப் புலப்படுத்துகின்றன. இவற்றின் விளக்கச் சொற்பொழிவுகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. நூறு பாடல்கள் ஆனவுடன் காணப்படும் பயனுக்கு, இந்த ஆறு பாடல்களுக்குப் பின்னே விளக்கம் கூறியிருக்கிறேன். காப்பு, நூல், அதிகப் பாடல்கள், பயன் ஆகிய எல்லாம் சேர்ந்து ஓர் அழகிய கணக்காக அமைந்திருக்கின்றன. நூற்றெட்டுப் பாடல்களாக இருப்பது பாராயணம் செய்பவர்களுக்கு அஷ்டோத்தர சத நாமங்களை நினைவூட்டும் அல்லவா? ★ பயனைத் தவிர மற்ற ஆறு பாடல்களில் மூன்று முன்னிலைப் பரவலாகவும் மூன்று படர்க்கைப் பரவலாகவும் உள்ளன. முருகன் திருவுருவம் உள்ளத்தில் குதி கொண்டதை ஒரு பாடலும் (1), அத்தோற்றமே எந்த இடத்திலும் வெளியே தோற்றுவதை ஒரு பாடலும் (3) சொல்கின்றன. '-அவ்விடத்தில் பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும் அச்சம் அகற்றும் அயில்வேலும் - கச்சைத் திருவரையும் சீறடியும் செங்கையும் ஈரா 355