பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 தரிசித்து அதனிடையே இறைவன் திருவுருவத்தை காணலாம். இப்படிப் பல காலம் பயிற்சி செய்தாலன்றிக் கண்ணை மூடிய வுடன் இறைவன் திருவுருவம் காண முடியாது. உள்முகமாக இறைவன் திருவுருவத்தைப் பார்ப்பதுதான் இறைவனோடு நாம் ஒன்றுபட வழியாகும். அதற்காகவே ஆண்டவனை உருவம் உடையவனாகத் தியானிக்கிறோம். மனம் எதையாவது நினைக்க வேண்டுமானால் அதற்கு ஏதேனும் உருவம் இருக்க வேண்டும். உருவம் இல்லாத பொருளை மனம் பற்றிக்கொள்ள இயலாது. ஆண்டவன் பல வடிவங்களை எடுத்துக்கொண்டு அருள் செய் வதற்குக் காரணம், அடியார்கள் மனத்தில் புக வேண்டும் என்பது தான. உருவமும் பாடலும் அருணகிரியார் முருகனுக்கு அன்பு செய்து அவனுடைய திருவுருவத்தை நன்கு தரிசித்தவர். வெளியே தரிசித்த திருவுரு வத்தை, உள்ளே கண்டு அதன் பெருமையை உணர்ந்து இன்புற்றவர். நாம் அந்த நிலையை அடைய வேண்டுமானால் மெல்ல மெல்லச் சாதனை செய்து பயிற்சி பெற வேண்டும். இறைவனுடைய திருவுருவத்தை நன்றாக உள்ளத்தில் உணர வேண்டும். அப்படி உணர்வதற்கு நமக்கு உபயோகமாக இருப்பவை இரண்டு பொருள்கள். ஒன்று இறைவனுடைய திருவுருவம்; மற்றொன்று அந்தத் திருவுருவத்தைப் பற்றிச் சொல்லும் பாடல். ஒரு குழந்தையைத் தினந்தோறும் பார்த்துக் கொண்டிருந்தால் அந்தக் குழந்தையின் உருவம் நம் மனத்தில் பதியும். குழந்தை ஊருக்குப் போய் இருக்கும்போது அதனை நினைத்தால் அதன் உருவம் உள்ளத்தில் வரும். அதுபோல இறைவனுடைய உருவங்களைக் கோயில்களில் பார்க்கிறோம்; படத்தில் பார்க்கிறோம். அவற்றை எல்லாம் நெஞ்சில் நிறுத்திக் கண் மூடித் தியானம் செய்து பழகியிருக்கிறோம். அந்த உருவம் உள்ளத்தில் நன்கு பதிந்து நிற்க, திருப்பித் திருப்பி அந்த உருவத்தை உள்ளத்தில் கொண்டு வந்து நிறுத்த முயல வேண்டும். பெரியவர்களுடைய பாடல் களில் ஆண்டவனுடைய திருவுருவத்தை வருணிக்கும் இடங் களை நினைவுபடுத்திக் கொண்டு, அவற்றைச் சொல்லிக் கொண்டே வந்தால் அப்போது ஆண்டவனுடைய வடிவத்தை உள்ளத்தில் ஓரளவு பதித்துக் கொள்ளலாம். 36C