பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 இங்கே இமாசலம் போலத்தான் குவிந்திருக்க வேண்டும் என்று எண்ணினான். அதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் பிடர் பிடித்து உந்தியது. "அவருடைய தம்பி அருச்சுனன் என்று ஒருவன் இருக்கிறானே; அவன் பூசை செய்த நிர்மாலியம் எங்கேயாவது இருக்கிறதா?" என்று கேட்டான். "அதுவா? அது ஒரு குடலையில் பாதிக்குக்கூட இல்லை. அதை முன்பே கொண்டுபோய்க் கொட்டிவிட்டோம். இதுதான் எடுக்க எடுக்க மாளவில்லை." அருச்சுனனுக்கு ஒரே மயக்கம். 'கைலாச முறையே தனியாக இருக்கிறதே! அண்ணா எப்போது பூசை செய்தார் என்பதை இவர் களிடமே கேட்டுப் பார்க்கலாம் என்று துணிந்து, 'iமசேனர் எப்போது பூசை செய்தார், இத்தனை நிர்மாலியம் குவியும்படி?” என்று கேட்டான். "அதை ஏன் கேட்கிறீர்கள்? மற்றவர்கள் எல்லாம் நந்தவனம் தேடி மலர் கொய்து வந்து சிவபெருமானுக்குக் கையால் அருச்சனை செய்வார்கள். மகா சிவபக்தராகிய அவரோ நந்தவனத்தையே அருச்சனை செய்து விடுகிறார்.” - "நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லையே!” 'நந்தவனத்தில் ஒரு மரத்தில் நிறைய மலர் குலுங்கும். அப்படியே கண்ணை மூடிக் கொண்டு அவ்வளவையும் சிவ பெருமானுக்கு அருச்சனை செய்வதாகப் பாவனை செய்வார். ஒரு கண நேரந்தான். அத்தனை பூவும் அடுத்த கணம் இங்கே நிர்மாலிய மாக வந்து விழும். இப்படி அவர் கண்ணில் பட்டவை எல்லாம் நிர்மாலியமாகி விடும். இந்த மாதிரி மானஸிக பூசை செய்யும் பக்தரைப் பார்ப்பது மிகவும் அருமை." இதைக் கேட்டவுடன் அருச்சுனன் குன்றிப் போனான். மனத் தால் செய்கிற காரியத்துக்கு மதிப்பு அதிகம் என்பதை உணர்ந்து கொண்டான். முழுப் பூசை மலரால் அருச்சனை செய்யும்போது அலட்சியமாக வீசி எறிகிறோம். இறைவன் திருவடியைக் கண்ணால் தரிசித்து 24