பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் குளிர்ந்தது மந்திர உபதேசம் செய்து கொள்கிறவர்கள் அந்த மந்திரத்தின் தேவதையைத் தியானம் செய்வதற்கு உதவியாக ஒரு சுலோகம் இருக்கும். அதைத் தியான சுலோகம் என்று சொல்வார்கள். மந்திரம் எந்த மூர்த்தியைக் குறிக்கிறதோ அந்த மூர்த்தியின் உருவத்தைத் தியான சுலோகம் வருணிக்கும். தியான சுலோ கத்தைச் சொல்லிக்கொண்டு அந்த வடிவத்தை மெல்ல மெல்ல உள்ளத்தில் பதித்துக் கொள்ள வேண்டும். அப்படிப் பதித்துக் கொண்டு மந்திரத்தை ஜபித்தால் மெல்ல மெல்ல ஒளி பரவி அந்தத் திருவுருவமும் ஒருவாறு உள்ளத்தே நிலை கொள்ளத் தொடங்கும். இந்த அநுபவத்தில் வல்லவராகிய அருணகிரியார் தம்முடைய அநுபவம் நமக்கும் வரவேண்டுமென்ற கருணை யினால் நமக்கு வழி காட்டத் தொடங்குகிறார். அருணகிரிநாதர் முருகனைக் குருவாகக் கொண்டவர். முருகன் குருவாய் எழுந்தருளி அவ்வப்போது அவருடைய பக்குவத்திற்கு ஏற்றபடி பல்வேறு உபதேசங்கள் செய்தான் என்பதை அவ ருடைய பாடல்கள் நமக்குக் காட்டுகின்றன. குருவின் பெருமை 6 ந்தக் காரியமானாலும் குரு இல்லாமல் கைகூடாது. வித்தியாகுரு, ஞானகுரு என்று குருநாதர்களை இரண்டுவித மாகப் பிரிப்பார்கள். கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியரை வித்தியா குரு என்றும், ஞான உபதேசம் செய்கின்றவரை ஞான குரு என்றும் சொல்வது வழக்கம். கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் எப்படி வெவ்வேறாக இருக்கிறார்களோ, அதுமாதிரியே ஞான உபதேசம் செய்யும் குருமார்களும் படிப்படியாக பலர் இருப்பது உண்டு. பழைய காலத்தில் ஒரே ஆசிரியரிடம் எல்லா நூல்களை யும் கற்றுக் கொள்ளும் வழக்கம் இருந்தது. அதேபோல் ஒரு ஞான குருவை அண்டி நல்லுபதேசம் பெற்றுச் சாதனம் செய்து அதனால் அநுபவம் பெற்றவர்கள் பலர். இறைவனுடைய திருவருளைப் பெற விரும்புகிறவர்கள் அதற்கு முன்பு குருநாதனுடைய திருவருளைப் பெற வேண்டும். குருநாதன் அருள் இல்லாமல் இறைவன் அருள் கிட்டாது. சூரிய காந்தமும், சூரியன் ஒளியும், பஞ்சும் சேரும்போது சூரியகாந்தம் பஞ்சைச் சுட்டுவிடுகிறது. சூரிய காந்தத்திற்குப் பஞ்சைச் சுடும் 361.