பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 ஆற்றல் இருந்தாலும் சூரியனுடைய சந்நிதியில்தான் அது சுடும். வீட்டுக்குள்ளே பஞ்சை வைத்துக் கொண்டு அதற்கு அருகில் மணிக்கணக்காகப் பூதக் கண்ணாடியை வைத்தாலும் அது சுடாது. இறைவன் ஆருயிர்களுக்கு அருள் செய்கிறான். பாசத்தை நீக்கி என்றும் பொன்றாத பேற்றை அருளுகிறான். ஆயினும் குருநாத னுடைய கிருபையினால்தான் ஆன்மாக்கள் இறைவனுடைய திருவருளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சூரியனுடைய கதிர்களால் சூரிய காந்தத்தின் ஆற்றல் பஞ்சை எரிப்பதற்குப் பயன்படுவதுபோல், குரு நாதனுடைய உபதேசத்தால் இறை வனுடைய திருவருள் ஆன்மாக்களுக்குப் பலிக்கிறது. அநுபவமும் குருவும் அநுபவம் உடையவர்கள் குருநாதர் ஆகிறார்கள். அநுபவம் என்பது காலத்தினால் முதிர்வது. மனிதன் வளர வளர அவ னுடைய அநுபவம் மிகுதியாகிறது. மனித வாழ்க்கையில் ஒரு காலம் வரையில் வளர்ச்சியும், அப்பால் தளர்ச்சியும் உடலுக்கு உண்டாகும். ஆனால் அறிவுக்கோ நாளாக நாளாக வளர்ச்சியே உண்டாகிறது. இளமை உடையவர்களிடத்தில் பலமும், முதுமை உடையவர்களிடத்தில் அறிவும் சிறந்து நிற்கும். பிராயத்தில் முதிர்ந்தவர்களாக மாத்திரம் இருப்பதில் பயன் இல்லை; அறி விலும் முதிர்ந்தவர்களாக வேண்டும். அதனால் வயோ விருத்தர், ஞான விருத்தர் என்று இருவேறு வகையாகச் சொல்வது வழக்கம். சிறிய பிள்ளையாக இருந்தாலும் ஞானத்தில் சிறந்திருந் தால் அவன் கும்பிடத் தகுந்தவன். பொதுவாக ஆசிரியர்களாக இருப்பவர்கள் மாணாக்கர்களை விட வயசு முதிர்ந்தவர்களாக இருப்பது உலக வழக்கம். பல காலம் கல்வித் துறையில் ஈடுபட்டுப் பலவற்றைத் தெரிந்து கொண்டு ஞான அநுபவத்தைப் பெற்ற பிறகே மற்றவர்களுக்குப் போதிக்கும் ஆற்றலைப் பெறுகிறார்கள் ஆசிரியர்கள். அதனால் பிறருக்குப் பயிற்றுவிக்கும் தகுதியைப் பெறுவதற்குப் பலகாலம் ஆகிறது. அவர்கள் பெரியவர்களாக, வயதில் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். சில துறைகளில் வயசானவர்களே சிறப்படை வார்கள். காரணம்: வெறும் படிப்பு மாத்திரம் போதாது; அநுபவம் உடையவராக இருக்க வேண்டுமென்பதுதான். பால ஜோஸ்யன், ՅՅշ