பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் குளிர்ந்தது வும், தனக்கு ஆதி இல்லாததாகவும் இருப்பது வேதம். ஆண்ட வனுடைய திருவடியைக் காட்டுவதற்கு அது நமக்குத் துணை செய்கிறது. இறைவனுடைய திருவடிக்கு அணியாக நின்று தம் முடைய ஒலியினால் தண்டையும் சிலம்பும் அந்தத் திருவடியைக் காட்டுகின்றன. வேதம் செய்கிற காரியத்தைக் காலில் அணிந் திருக்கும் அவ்விரண்டும் செய்கின்றன; ஆகை யினால் வேதமே தண்டையாகவும், சிலம்பாகவும் இருக்கின்றது என்று சொல் வார்கள். இறைவனுடைய திருவடியைக் கண்ட பிறகு நம்முடைய பார்வை மேலே எழும்புகிறது. மனிதனுடைய பார்வை வரவர மேலே போக வேண்டும். முறையாக அடியிலிருந்து போனால் தான் உச்சி வரையில் எட்டும். ஆண்டவனுடைய திருவடி எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருப்பது. "பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்' என்று மணிவாசகப் பெருமான் பாடுவார். எல்லாவற்றையும் திருவடி தாங்கிக் கொண்டிருக்கிறது என்று திருமுருகாற்றுப்படை சொல்கிறது. எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருந்தாலன்றித் தாங்குவது என்பது அமையாது. ஆகையால் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் தனக்கு மேல் வைத்துத் தான் எல்லாவற்றுக் கும் கீழாக நின்று தாங்கும் திருவடி அது. அப்படியுள்ள ஆதாரப் பொருளை முதலில் கண்டு, அப்பால் நம் கண்ணையும் கருத்தை யும் மேலே எழுப்ப வேண்டும். வடிவேல் முதலில் திருவடியைக் கண்டு, பின்பு ஒலியை விளைவிக் கும் தண்டையையும் சிலம்பையும் கண்டு நிற்கும் நாம், அந்தத் திருவடிக்கு அருகில் வேலின் ஒரு முனை அமைந்திருப்பதைப் பார்க்கிறோம். முருகப் பெருமானது திருக் கையில் ஞான சக்தியாகிய வேல் இருக்கிறது. அது அவனுடைய திருவுருவத்தை ஒட்டி அமைந்து விளங்குகிறது. திருவடி முதல் திருமுடிவரையில் அது செல்கிறது. அது அவன் திருவுருவ எல்லையைக் காட்டு கிறது. வேலையே ஏணியாகக் கொண்டு நம்முடைய கண் மெல்ல மெல்ல ஏறினால் முருகப்பெருமான் திருவுருவம் முழு வதையும் ஒருவாறு பார்த்துவிடலாம். 367