பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 இதுவும் ஒரு குறிப்பை உடையது. வேலே ஞானம் என்று சொல்வார்கள். இறைவனுடைய தரிசனம் பெற வேண்டுமானால் ஞானத்தை அடைய வேண்டும். ஞானம் என்பது ஒரே மாதிரி இருப்பது அல்ல. வரவர அறிவு மிகுதியாகும்போது தெளிவும் மிகுதியாகிறது. தெளிவு என்பது பொருள்களைப் புலப்படுத்தும். ஐயம் நீங்கிப் பொருள் புலப்படும் தெளிவு மிகுதியாக ஆக இறுதியில் எல்லா ஐயங்களும் நீங்கிப் பொருள்கள் யாவும் தெளி வாகும்; முடிந்த முடிவில் கடவுளைத் தெளிந்து அநுபவிக்கும் நிலை வரும். அதுவரைக்கும் ஞானம் படிப்படியாக ஏறி வரும். ஞான சக்தியாகிய வேலைக் காணும் போது நாம் மெல்ல மெல்லக் கீழே இருந்து படிப்படியாக ஏறுகிறோம். ஆண்டவனுடைய திருவடியை ஆதாரமாகக் கொண்டு, பிறகு ஞானம் என்னும் ஏணி யில் மெல்ல மெல்ல ஏறுகிறோம். இறைவனுடைய திருவடியே ஞானமாக நிற்பதுதான். அது ஞானப் பொய்கையானால் வேலை ஞான ஆறு என்று சொல்லலாம். 'தொண்டர்கண்டு அண்டிமொண்டு உண்டு இருக்கும் சுத்த ஞானம் எனும், தண்டையம் புண்டரிகம் தருவாய்' என்று கந்தர் அலங்காரத்தில் வந்ததை நாம் முன்பு பார்த்தோம். முருகப் பெருமானுடைய திருவடியைத் தரிசித்து, அதன் அருகில் தோன்றும் வேலைப் பற்றிக் கொண்டு மெல்ல நம் முடைய கண்ணையும் கருத்தையும் ஏறவிடுவோம். அதன் வழியே செல்லும் கண் முதலில் அவன் திருவடியைக் கண்டு, பின்பு அவன் இடையைக் கண்டு, பின்பு அவன் திருக்கரத்தில் வந்து நிற்கும். முருகன் எப்பொழுதும் வேலைத் தன் கையில் பற்றியிருக்கிறான். "வேலே விளங்கு கையான்.: கிரெளஞ் சவதம் அவன் திருக்கரத்தில் பற்றிக்கொண்டிருக்கும் அந்த வேலைப் பார்க்கும்போது பழைய கதை நினைவுக்கு வருகிறது. அதே திருக்கரத்தினால் முருகப் பெருமான் வேலை ஒச்சிப் பல பராக் கிரமச் செயல்களைக் காட்டினான். அவற்றுள் அருணகிரியார் இங்கே ஒன்றை நினைப்பூட்டுகிறார். 368