பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் குளிர்ந்தது 'வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல்' என்று வேலைச் சொல்வது வழக்கம். என்ன இருந்தாலும் வேல் கருவிதான். அதனை உடைய வனுக்கு வீரம் இருந்தாலன்றிப் படைக்கலம் வீரம் உடையது ஆகாது. 'வாளொடென் வன்கண்ணரல்லார்க்கு” என்பது குறள். படையை யார் விடுகிறார்களோ அவர்களுடைய வீரத்தைப் படையின்மேல் ஏற்றிச் சொல்வது வழக்கம். அதை இலக்கணை என்று சொல்வார்கள். அந்த வகையில் வேலை வீரவேல் என்று சொல்வர். முருகன் வீரர்களில் சிறந்த வீரன். அவனுடைய கைப்பட்டது எதுவும் பெருமை அடைகிறது. ஆயுதங்களில் சிறந்ததாகிய வேல் வீரர்களில் சிறந்தவனாகிய முருகன் திருக்கரத்தில் இருந்து மிக்க புகழை அடைந்தது. கடம்பும் தடம்புயமும் பொதுவாக வீரனைப் பற்றிச் சொல்லும்போது அவன் தோள் வலியை உடையவன் என்பார்கள். தோள், ஆண்மைக்கு இருப்பிடம். 'நீடிய அரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை சூடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோர்க்கே’’ என்று கம்பன் இராமனுடைய வீரத்தைப் புலப்படுத்துகிறான். முருகப்பெருமானுடைய வீரத்துக்கு அடையாளமாக இருப் பன அவனுடைய திருத்தோள்கள். அந்தத் திருத்தோளுக்கு அலங் காரமாக இருப்பது கடம்பமாலை. அந்த இரண்டையும் இப் போது நமக்குக் காட்டுகிறார். கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும். முருகனுக்குக் கடம்ப மலர் மிகவும் பிரியமானது. அவன் திருத் தோளில் கடம்ப மலர் மாலை இருக்கிறது. அவன் கடம்ப மலரில் இருக்கிறான். கடம்ப மரத்தின் அடியிலும் அவன் எழுந் தருளியிருப்பான். திருமுருகாற்றுபடை, 371