பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 தகட்டிற் சிறந்த கடம்பையும் நெஞ்சையும் தாளிணைக்கே புகட்டிப் பணியப் பணித்தருள்வாய். மென்மை பெறல் கடம்பு முருகனுக்கு அருச்சனைப் பொருளானால் சிறந்த பயன் பெறும். மனமும் முருகன் திருவடியைப் பற்றுவதனால் சிறந்த பயனைப் பெறும். கடம்பு மென்மையானது. மனமும் கடம்போடு சேர்ந்து திருவடியிற் கிடக்கத் தொடங்கினால் சார்ந்த பொருளின் மென்மையைப் பெறும். வன்மையான மனத்தில் நெகிழ்ச்சி இராது. அன்பு என்பதே நெகிழ்ச்சிதான். வலிய மனத்தில் அன்பு உண்டாகாது. நெகிழ்ந்து உருகினால் மனத்தில் அன்பு உண்டாயிற்று என்பதைத் தெரிந்து கொள்ளலாம். வன்மையான நெஞ்சம் மென்மையான கடம்போடு சேர்ந்தாவது மென்மையை அடையட்டுமே என்று எண்ணிச் சொல்வது போலவும் இருக்கிறது. இது. பூசை செய்வதும் பணிவதும் மனத்தின் நிலையைப் பொறுத்துப் பயன் தருபவை. மனத்தைத் தாளிற் புகட்டினால் அருச்சனையும் பணிதலும் உண்மையாக நிலவும். அந்த வகையில் பணிய வேண்டுமானால் நம்முடைய முயற்சியால் இயலாதென்று கருதி, "எம்பெருமானே! நீயே இதற்கு வழி செய்ய வேண்டும்' என்று பிரார்த்திக்கிறார். 'என் குழந்தை புத்தகத்தோடு பள்ளிக்கூடத்துக்கு வரும்படி ஏதாவது செய்யுங்கள் வாத்தியாரே என்று முரட்டுக் குழந்தை யைப் பற்றித் தாய் சொல்வது போல இருக்கிறது இது. 4 முருகன் இந்த வேண்டுகோளை விடுக்கும்போது முருகனை அருண கிரியார் எப்படி நினைக்கிறார்? மனம் ஆசையினால் உலகத்தையெல்லாம் சுற்றுகிறது. உலகு முழுவதையும் தன் ஆசைக் கரத்தில் அடக்கப் பார்க்கிறது. 26