பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராப்பகல் அற்ற இடம் அலை அலையாக நீர் ஓடுவது போலத் தோற்றும்; அதுதான் கானல். கானலைப் பார்க்கிறவர் இரண்டு வகையினர் இருக் கிறார்கள். கானலை நீராகக் கண்டு ஏமாந்து போகிறவர்கள் ஒரு வகை; அது கானல்தான் என்று தெரிந்து கொண்டபிறகும் அதைப் பார்க்கிறவர்கள் ஒரு வகையினர். இரண்டு பேருக்கும் கானல் தோற்றம் இருக்கும். அவர்கள் கண் பார்வையில் வேறுபாடு இல்லை. ஆனால் அவர்களுடைய கருத்தில்தான் வேறுபாடு இருக்கிறது. கானல் என்று உணராதவன் நீர் என்று எண்ணிப் பார்த்துக் கொண்டிருப்பான். கானல் என்று தெரிந்து கொண்ட வன் அது வெறும் கானல் என்பதை உணர்ந்திருப்பான். இரண்டு பேருடைய கண்ணுக்கும் தோன்றும் தோற்றம் ஒன்றுதான். ஆனால் உணர்விலே வேறுபாடு உண்டு. அதுபோல் உலகத்தில் வளைய வருகின்ற நமக்கு நடக்கின்றன எல்லாம் உண்மை என்று தோற்றும். அதே உலகத்கில் இருக்கும் ஞானிக்கும் அந்தத் தோற்றம் உண்டு. ஆனால் அவை யாவும் வெறும் தோற்றந்தான் என்ற தெளிவு அவனிடம் இருக்கும். மெய்யும் பொய்யும் நாம் ஒரு சினிமாப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சினிமாக் கதையில் சண்டை நடக்கிறது. அதைப் பார்த்துக் குழந்தை iல் என்று அழுகிறது. யாரோ கதையில் இறந்து போகிறாள். நாலு பேர் சேர்ந்து அழுகிறார்கள். நமது குழந்தையும் அழுகிறது. அதற்கு அங்கே நடப்பது வெறும் தோற்றம் என்ற அறிவு இல்லை. நமக்கோ அது நன்றாகத் தெரியும். சண்டை நடந் தாலும், சாவு நடந்தாலும் நாம் அஞ்சுவதும் இல்லை; அழுவதும் இல்லை. நாம் எப்பொழுதும் போலவே அமர்ந்திருக்கிறோம். உலக இயலில் குழந்தையைப் போல இருப்பவர்கள் நாம். பெரியவர்களைப் போல இருப்பவர்கள் ஞானிகள். அவர்கள் எப்போதும் நடுநிலையில் இருப்பார்கள். அறிவும் அறியாமையும் நாம் தூங்கும்போது ஒன்றும் அறியாமல் தூங்குகிறோம். விழித்திருக்கும்போது எல்லாவற்றையும் கண்டு உவகையால் துள்ளி, துக்கத்தால் சாம்பிக் கொண்டிருக்கிறோம். ஞானிகளுக்கோ 383