பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராப்பகல் அற்ற இடம் அணிந்திருக்கவில்லை; அதோடு அன்பர்கள் பூசிக்கின்ற குரா மலரையும் அணிந்திருக்கிறான். அன்னை புனைந்த தண்டை மிகச் சிறந்தது. அதனுடன் அன்பர் புனைந்த குரா மலரையும் அணிந்திருக்கிறான். அத்தகைய திருவடியை நீ தரவேண்டு மென்று பிரார்த்திக்கிறார். அந்தத் திருவடி எதற்காக? மனம் பற்றிக் கொள்வதற்காக. மனம் ஓரிடத்தில் நிற்க வேண்டும். எதையும் பற்றிக் கொள்ள மல் அது நிற்காது. ஒன்றையும் பற்றிக் கொள்ள முடியவில்லை யென்றால் துக்கம் வந்துவிடும். அல்லது பலவற்றைப் பற்றிக் கொண்டு வீதியில் போய்க் குறும்பு செய்யும். இந்த இரண்டு நிலையும் இல்லாமல் கட்டுப்பட வேண்டுமானால் அதை ஒன்றோடு சேர்க்க வேண்டும். அது ஆண்டவனுடைய திருவடி. 'உன் திருவடியை என் உள்ளத்தைக் கட்டும் தறியாக ஆக்கிக் கொள்ள வேண்டும்' என்பது போலச் சொல்கிறார். இராப்பகல் அற்ற இடம் கிடைத்தால் மட்டும் போதாது. அங்கே இருக்க வேண்டும். இருப்பதாவது உடம்பும் உள்ளமும் அலையாமல் அமைந்திருப்பது. பின்பு துதிக்க வேண்டும். இங்கே, துதித்தல் என்பது தியானத்தைக் குறிப்பது. அமைதியாக இருந்து தியானம் செய்ய வேண்டும். அப்படித் தியானம் செய்வ தற்கு ஒரு பற்றுக் கோடு வேண்டும். நல்ல இடத்தில் உட்கார வைத்து, அமருவதற்கு ஏற்ற வசதி யும் செய்து, துதிப்பதற்கு முயற்சியும் செய்யச் செய்துவிட்டால் பயன் இல்லை. இவ்வளவுக்கும் லட்சியமாகிய அல்லது பற்றுக் கோடாகிய ஒரு பொருள் வேண்டும். அதுதான் குராப்புனை தண்டையந்தாள். நான் இருந்தே துதிக்க என்று சொல்கிறார். இருத்தல் என்பதற்கு உடம்பு அசையாமல் இருப்பது என்பது மாத்திரம் பொருள் அன்று. மனத்தாலும் சஞ்சாரம் செய்யாமல் அமைதியாக இருத்தல் என்று பொருள் கொள்ள வேண்டும். 'மனம் அடங்கும் திறத்தினில் ஓரிடத்தே இருந்தறியேன்” என்று இராமலிங்க சுவாமிகள் இந்த நிலையைச் சொல்கிறார். 387