பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 மனம் அடங்கும் வகையில் ஏதாவது ஒரிடத்தில் அமர்ந் திருக்க வேண்டும். அட்டாங்க யோகத்தில் மூன்றாவது பயிற்சி யாக ஆசனத்தைச் சொல்வார்கள். இயமம், நியமம், ஆசனம் என்று வரும். மனம் சூட்சுமமாக இருப்பது. அதைப் பக்குவப் படுத்தி ஒரு நிலையில் வைப்பதற்குச் சாதனம் செய்ய வேண்டும். அமைதியாக அமர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். தாள் அருளாய் குழந்தையிடத்தில் காகிதம் கொடுத்தாலும் கிழித்து எறிந்து விடும்; நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தாலும் கிழித்துவிடும். வெறும் காகிதத்திற்கும், நூறு ரூபாய் நோட்டுக்கும் உள்ள வேறுபாடு அதற்குத் தெரியாது. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு தெரிந்து நூறு ரூபாய் நோட்டின் மதிப்பை உணரச் செய்த பிறகு கொடுத்தால் அது அதனை மிகவும் அக்கறையோடு பாதுகாக்கும். அவ்வாறு, அமைதியற்ற மனத்தோடு இருக்கும்போது இறைவன் திருத்தாளைக் கொடுத்தால் அதனால் பயன் வராது. அந்தத் தாளின் மதிப்பை உணர்ந்து பயன்படுத்திக் கொள்ளாமல் போய் விடுவோம். ஆகவே, முதலில் மனத்தில் அமைதியைத் தந்து அப்புறம் இறைவன் திருத்தாளைத் தர வேண்டும். அமைதி உண்டாகக் கூடிய இடந்தான் இராப்பகல் அற்ற இடம். அதனைத் தந்து, பின்பு அமைதியாக இருந்து துதிக்கச் செய்து, அப்புறம் தண்டையந் தாள் தரவேண்டுமென்று முறைப்படுத்தி விண்ணப்பம் செய்கிறார். "என் மனம் நடுநிலையை அடைந்திருக்கும் இராப்பகல் அற்ற இடத்தை நீ காட்ட வேண்டும். இடம் காட்டினால் மட்டும் போதாது. அந்த இடத்தில் செய்வதற்குரிய செயல் வேண்டும். அந்தச் செயலுக்குப் பற்றுக் கோடாக உன் திருவடியையும் நீ தந்து அருள வேண்டும்' என்கிறார். இவ்வாறு சகல கேவல நிலையின்றி அமைதியான பாங்கில் ஆண்டவனைத் தியானித்து அவன் திருவடியைப் பற்றிக் கொள்ளு தல் பேரின்பத்திற்கு வாயில், இதனைப் பெற வேண்டுமென்று பிரார்த்தித்த அருணகிரியார் அடுத்தபடியாக முருகப் பெருமானைப் புகழ்கிறார். 388