பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன மலர் அதை ஆண்டவன் திருவடியில் அடக்கப் பார்க்கிறார் அருணை முனிவர். அதற்கு முருகன் திருவருள் துணையை நாடுகிறார். சூரன் வளர்தல் முருகன், ஆசையை வளர்த்து உடலையும் வளர்த்துப் படையையும் வளர்த்துக் கொடுமையையும் வளர்த்த சூரபன் மனை அடக்கியவன். சூரனுடைய ஆசைக்கு அளவே இல்லை. ஆற்றல் இல்லாத நமக்கே எல்லையில்லாத ஆசைகள் எழு கின்றனவே! அசுரேந்திரனாகிய அவனுடைய ஆசை அசுர ஆசை யாகத்தானே இருக்கும்? அதை அளவிட முடியுமா? ஆனாலும் ஒருவாறு அதன் பரிமாணத்தை அவனுடைய பரிமாணத்தால் சித்தரித்துக் காட்டுகிறார் அருணகிரியார். இந்தப் பூவுலகமும் பிறவும் சேர்ந்த பெரிய உருண்டை ஒன்று உண்டு. அதற்குப் பிரம்மாண்டம் என்று பெயர். தான் யாவருக்கும் எப்பொருளுக்கும் தலைவனாக இருக்க வேண்டும் என்ற பதவியாசை சூரனுக்கு உண்டாயிற்று. நாம் ஒரு காணி நிலம் வாங்குகிறோம். அதில் நாம் வேலி போட்டுக் கொள்கிறோம். பிறகு பக்கத்திலுள்ள வேறொரு காணியை வாங்குகிறோம். அதற்கும் சேர்த்து வேலி போடுகிறோம். இப்படி நம் சொத்து விரிய விரிய வேலியும் விரிவடைகிறது. சூரனும் தன் சொத்தை விரிவாக்குகிறான். அதற்குத் தனியே வேலி போடவில்லை. தானே வேலியாகப் படர்கிறான்; உயர் கிறான். தானே தன் பொருளுக்கு எல்லை கோலி நிற்கிறான். அசுரனல்லவா? தன் மாயத்தால் எல்லாம் செய்ய வல்லவன் தானே? இந்தப் பூமியைத் தனதாக்கிக் கொண்டான்; இதைச் சார்ந்த கிரகங்களையும் தன் ஆணைக்குள் அடக்கினான். பிரம்மாண்டம் முழுவதையும் தனக்கு உரியதாக்கி அதன் கீழே காலும் உச்சியில் தலையும் உடையவனாக வளர்ந்து சுற்று முற்றும் தன் அரசின் அளவைப் பார்த்தான். தலைக்குமேல் புண்டரீகன் அண்டத்தின் முகடு இருந்தது. இதற்கு மேலே என்ன இருக்கிறது? அதையும் நாம் நமக்குச் சொந்தமாக்கிக் கொண்டால் என்ன?’ என்ற 27