பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 யின் பெருமையைக் குகன் தெரிந்துகொள்ள வேண்டுமென்று பரதன் பேசுகிறான். உலகம் பெரியது. அதை உண்டாக்கிய பிரமன் அதைவிடப் பெரியவன். அந்தப் பிரமனைத் தந்த திருமால் அவனைவிடப் பெரியவன். அவனைப் பெற்ற கோசலை பின்னும் பெரியவள் என்று அடுக்கடுக்காகச் சொல்கிறான். 'கோக்கள் வைகும் முற்றத்தான் முதல்தேவி, மூவுலகு மீன்றானை முன்னின் றானைப் பெற்றத்தாற் பெறுஞ்செல்வம் யான்பிறத்த லால்துறந்த பெரியாள்.' பல பெரிய பொருள்களை முதலில் காட்டி அவற்றுக்கெல்லாம் மேலான பெருமை உடையவள் என்று பரதன் குறிப்பிக்கிறான். இவ்வாறு படியின் மேல் படியாக உயர்த்தி வைத்துக் காட்டுவது ஒர் அழகு. அந்த வகையில் அருணகிரியார் திருமாலின் பெருமையைக் கூறி அதற்குமேல் ஒரு படி கட்டி, முருகப் பெருமானுடைய புகழை வைத்துக் காட்டுகிறார். ஏதேனும் ஒன்றைப் பாராட்ட வேண்டுமானால் அந்தத் துறையில் வல்லவர்கள்தாம் பாராட்ட வேண்டும். சங்கீதம் தெரி யாதவன் கழுத்துச் சுளுக்குத் தலையை ஆட்டினாலும் அதனால் பயன் இல்லை. உண்மையாக இசையின் சுவை தெரிந்தவன் நயம் தெரிந்து தலையை ஆட்டினால் அதற்குப் பொருள் உண்டு. கலைஞர்களுக்கும் மகிழ்ச்சி உண்டாகும். முதலையைக் கொன்று கசேந்திரனைக் காப்பாற்றிய பெருவீரராகிய திருமால் முருகப் பெருமானுடைய பராக்கிரமத் தைப் போற்றுகிறார். இதனால் முருகப் பெருமானுடைய பராக்கிரமத்தின் பெருமை நன்கு விளங்குகிறது. பராக்கிரமம் - இறைவனுக்கு இரண்டு வகை ஆற்றலுண்டு: அருள் நிரம்பிய பல திருவிளையாடல்களைச் செய்வது; வீரம் காட்டி அல்லாத வர்களை அழிப்பது. முதலில் சொன்னதைத் திருவிளையாடல் அல்லது லீலை என்றும், பின்னால் சொன்னதைப் பராக்கிரமம் என்றும் சொல்வார்கள். இரண்டும் ஆண்டவன் அருட் செயல் களே. ஆனால் முன்னது நயமாகத் தோன்றுகிறது; பின்னது பய 392