பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 கராப்படக் கொன்றுஅக் கரிபோற்ற நின்ற கடவுள்மெச்சும் பராக்ரம வேல, நிருதசங் கார, பயங்கரனே. (இரவும் பகலுமாகிய சகல கேவலம் கடந்த நடுநிலையான இடத்தைக் காட்டி யான் அங்கே நிலையாக அமர்ந்து துதிக்கும் படியாகக் குராமலரை அணிந்த தண்டையோடு கூடிய அழகிய நின் திருவடியை அருள்வாயாக ஆதிமூலமே என்று கசேந்திரன் அழைத்தபோது அதன் காலைப் பற்றி இழுத்த முதலையைக் கொன்று, அழைத்த கசேந்திரன் துதிக்கும் வண்ணம் அதன் முன்னே நின்று காட்சி தந்த கடவுளாகிய திருமால் புகழுகின்ற பராக்கிரமத்தை உடைய வடிவேற் பெருமானே, அசுரர்களைச் சங்காரஞ் செய்தவனே, அவர்களுக்குப் பயத்தை உண்டாக்குபவனே! இராப்பகல்-சகல கேவல அவஸ்தைகள். இடம் என்றது நிலையை. இருந்து - அமைதியாக இருந்து. கரா - முதலை, பட - இறக்க கடவுள் - திருமால். நிருதர் - அசுரர். வேவ, சங்கார, பயங்கரனே, தாள் அருளாய் என்று முடித்துப் பொருள் கொள்க.) - முருகன் திருவருளால் தியானம் பலிக்க வேண்டும் என்பது கருத்து. 394