பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 உருவம் தோன்றும் கம்ப ராமாயணத்தில் இப்படி ஒரு காட்டு வருகிறது. இராமாயணக் காட்சி ர்ப்பணகையின் வாயிலாகச் சீதாபிராட்டியின் எழிலை இராவணன் கேட்டான். கேட்டவுடன் அந்தப் பிராட்டியிடம் ஆசை கொண்டான். அவன் சீதையைப் பார்த்ததில்லை. ஆனாலும் சூர்ப்பணகை வருணித்த வருணனையைக் கொண்டு எப்போதும் பிராட்டியின் நினைவாகவே இருந்தான். ஒரு நாள் அவனுக்குத் திடீரென்று வெளியில் ஒரு பெண்ணின் தோற்றம் தோன்றியது. அந்த அழகிய தோற்றத்தைக் கண்டவுடன், அவள்தான் சீதையாக இருக்க வேண்டுமென்று எண்ணினான். சீதையை நேரிலே கண்ட தன் தங்கையை அழைத்துக் காட்ட வேண்டுமென்று நினைத் தான். உடனே சூர்ப்பணகையை வரவழைத்தான். 'இவள்தான் நீ சொன்ன சீதையா? பார் என்று புற வெளியைக் காட்டினான். அங்கே இருந்தது வெறும் வெளிதான். ஆனால் அவனுடைய உள்ளத்தில் இருந்த முறுகிய காதலால் சீதையாகத் தோற்றியது. சூர்ப்பணகைக்கோ இராமன் மேல் நினைவு இருந்தது. அந்தப் பெருமானைக் கண்ணாரக் கண்டு அவனிடத்தில் முறுகிய ஆசையைக் கொண்டிருந்தாள். தன்னுடைய உள்ளத்தில் அவனுடைய உரு வத்தை எப்போதும் எண்ணிக் கொண்டு அவன் அருள் கிட்ட வில்லையே என்று வாடிக் கிடந்தாள். அவளை இராவணன் இப்படி அழைத்துக் கேட்டவுன், அவள் தன் உள்ளத்திலுள்ள பாவத்தின் விளைவாக, “இவன்தான் அந்த வல்வில் இராமன்' என்றாள். வெறும் வெளியில் அவரவர்களுடைய மனோபாவத் திற்கு ஏற்றபடி உருவம் தோன்றியது என்று கம்பர் பாடுகிறார். அருணகிரியார் அநுபவம் உருவெளித் தோற்றம் என்பது காண்பவருடைய பாவத்தி னால் உணர்வதேயன்றி உண்மையானது அன்று. உள்ளத்தில் தோற்றுகிற தோற்றம் எதுவோ, அதுவே ஆர்வம் முறுகியிருப்ப தனால் புறவெளியிலும் தோற்றுகிறது. வெறும் காமத்திற்கே இப்படி உருவெளித் தோற்றம் என்றால், உயிரோடு ஒட்டிய அன்புக்கு அத்தகைய தோற்றம் வருவது வியப்பு அன்று. உள்ளத் 398