பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று: கடலையும் மலையையும் நாட்டையும் கைப்பற்றிய ருஷியரும் அமெரிக்கரும் இப்போது வானவெளியைத் தாண்டி மேலே பறந்து சந்திரமண்டலத்தில் கொடி கட்டப் பார்க்கிறார்கள் அல்லவா? மனிதர்களுக்கே இந்த ஆசை இருக்குமானால் அசுரர் தலைவனுக்குப் பிரம்மாண்டத் துக்கு மேலே உள்ளவற்றையும் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டு மென்ற ஆசை எழுந்தது வியப்பன்று. - அவன் பிரம்மாண்டத்தின் அடிக்கும் முகட்டுக்குமாக அளவுத் தம்பம் போல நின்றவன். அந்த முகட்டை ஒரு முட்டு முட்டினான். அண்ட முகடு பிளந்தது. மேலே ஆசை வளர்ந்தது. அதோடு அவனும் வளர்ந்தான். மேலே எட்டிப் பார்த்தான். அங்கே இந்திரலோகம் இருந்தது. அதன் பொலிவு அவன் கண்ணைக் கவ்வியது. அதன் வளம் அவன் உள்ளத்தை அள்ளியது. அங்கும் தன் ஆசைக் கரத்தை நீட்டினான். பின்னும் உயர்ந்தான். அந்த லோகத்தை முட்டும்படி அவன் எட்டினான். புண்டரீகன் அண்ட முகட்டைப் பிளந்து இந்த்ர லோகத்தை முட்ட எட்டி, சூரன் கொடுமை சூரன் தான் பிறந்த இடத்தோடு நில்லாமல் ஒவ்வோரிட மாகச் சென்று மோதித் தன் ஆணையை நிலை நிறுத்தினான். போன இடங்களிலெல்லாம் அவனுடைய கொடுமைக்குப் பயந்து யாவரும் குலைந்தனர். யாருக்கும் அடங்காத எருது - பகடு - வாலைக் குழைத்துக் கொம்புகளை நீட்டிக் கொண்டு பாய்ந்து வரும்போது அதன் முன்னே நிற்க யாவரும் அஞ்சுவார்கள். அது மண்மேட்டைக் குத்தும்; சுவரை முட்டும்; மரத்தை மோதும்; மனிதர்களைக் குத்திக் குலை சாய்க்கும். அது போன இடமெல் லாம் அச்சம்; அலங்கோலம்; நிலை குலைவு; படுநாசம். சூரனும் அப்படித்தான் புகுந்தான். தன் கொடுமையினால் யாவரையும் அஞ்சச் செய்தான். போன இடங்களில் அவனை வர வேற்பார் ஏது? அவனே வலியச் சென்று மோதினான்; பொரு தான்; அமைதியைக் குலைத்தான்; வாழ்வைக் கலைத் தான்; மேட்டைப் பள்ளமாக்கினான். பள்ளத்தை மேடாக்கினான். 28