பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணாரக் காணும் காட்சி லிங்கமும் வேலும் தன்னைக் கண்டு மனசில் கொள்ளவேண்டுமென்று கருதியே சிவலிங்கம் முதலிய எளிய உருவத்தை ஆண்டவன் ஏற்றருளி யிருக்கிறான். இறைவன் திருக்கரத்தில் மானும் மழுவும், திருமுடியில் பிறையும் கங்கையும் கொண்ட திருக்கோலத்தைக் கண்ட பிறகு மனசில் நினைத்துப் பார்த்தால் எளிதில் அந்தக் கோலம் பதியாது. அப்படியின்றிச் சிவலிங்கத்தையே பார்த்தால் அது எளிதில் பதியும். அதனைச் சோதிமயமாகப் பார்க்கிற நிலை வந்துவிட்டால் பின்னும் சிறப்பாக இருக்கும். சிவலிங்கம் அருவுருவம் என்று சொல்வார்கள். அதாவது முழு உருவமும் அன்று; முழு அருவமும் அன்று. இரண்டு தன்மையும் ஒருங்கே கொண்டது என்று பொருள். கால், கண் முதலிய இல்லாமல் இருத்தலால் முழு உருவம் என்பதற்கில்லை; கண்ணால் காணும் படி இருப்பதனால் முழு அவம் என்று சொல்வதற்கும் இல்லை. ஆகையால் இரண்டுக்கும் நடுவில் அருவுருவம் என்று சொல் கிறார்கள். அந்த லிங்கம் மிக எளிதில் தியானத்தில் வைப்பதற் குரியது. அப்படி முருகப் பெருமானை வழிபடுகிறவர்களுக்குத் தியானத்திற்கு எளிதாக இருக்கிற பொருள் ஒன்று உண்டு. அவன் திருக்கரத்தில் மின்வெட்டைப் போலத் தோற்றும் வேல் இருக்கிறது. திருவடியிலிருந்து திருமுடி வரைக்கும் தொடர்பு டையது அது. அது மிகவும் எளிதில் நினைப்பதற்குரியது. முதலில் நினைவுக்கு வருவது அதுதான். முதலில் அது தோன்றுகிறது என்று அருணகிரியார் பாடுகிறார். செங்கேழ் அடுத்த சின வடிவேலும். செங்கேழ் - செய்ய நிறம். அதனைக் கொண்ட சினம் பொருந்திய வேல் அது. முருகனுக்கு உள்ளதை வேலின் மேல் ஏற்றிச் சொன்னபடி உலகத்தினருக்குத் துன்பத்தைத் தரும் அசுர சக்தி யிடம் உள்ள கோபம் அது. அப்படியின்றிச் சின்னமான வடிவேல் என்றும் பொருள் கொள்ளலாம். முருகப் பெருமானுக்குரிய சின்னமாக அமைகின்ற வேல் என்பது அதற்குப் பொருள். முருகப் பெருமானுக்குப் பிரதிநிதியாக எழுந்தருளுகிற சின்னம் வேல். வேலில் முருகனை 40i.