பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணாரக் காணும் காட்சி நாகாசல வேலவனை நினைக்கிறார். செங்கோட்டில் உள்ள எம்பெருமானைக் காண்பதற்கு நான்முகன் நாலாயிரம் கண் படைத்திலனே' என்று குறைபட்டதையும் நாம் கேட்டோம். அந்தச் செங்கோட்டு வேலனை இப்போது சொல்கிறார். அவன் மனம் அந்தத் தலத்தில் மிகவும் ஈடுபட்டிருக்கிறது. செங்கோட்டிலே எழுந்தருளியிருக்கும் முருகனை எங்கே நினைத்தாலும் அவ னுடைய வேல் முதலியன தோற்றும் என்று இந்தப் பாட்டில் சொல்கிறார். பதுமமலர் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன்என எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர்நிற்பனே. திருச்செங்கோட்டைச் செல்லும்போது அங்கே நீர்வளமும், நிலவளமும் நிறைந்து நின்ற காட்சியையே சொல்கிறார். முன்பும் அப்படிச் சொல்லியிருக்கிறார். நீர்வளம் நிரம்பிய பொய்கையில் தாமரை மலர்கள் மலர்ந்திருக்கின்றன. முத்துக்கள் பிறக்கும் இடங்களில் தாமரையும் ஒன்று. கரும்பிலும், யானையின் தந்தத் திலும், சிப்பியிலும், மேகத்திலும் முத்துக்கள் தோன்றும் என்று சொல்வார்கள். முத்து வகைகளில் ஒன்று தாமரை மலரிலிருந்து தோன்றுவது. திருச்செங்கோட்டிலுள்ள பொய்கையில் தாமரை யிலிருந்து முத்துக்கள் பிறக்கின்றனவாம். பதும மலர் கொங்கே தரளம் சொரியும் செங்கோடை கொங்கு - வாசனை. தரளம் - முத்து. தாமரை மலர்கள் வாசனை யையும் முத்துக்களையும் சொரிகின்ற திருச்செங்கோடு என்கிறார். ஆண்டவனுக்கு முத்தையன், முத்துக் குமாரசுவாமி என்ற பெயர்கள் உண்டு. முத்துச் சொரியும் இடங்களில் எல்லாம் அவன் இருப்பான். "ஒருகோடி முத்தம் தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே’’ என்று பின்னே ஒரு பாட்டில் வருகிறது. திருச்செந்தூரில் கடல் முத்துச் சொரிகிறது. திருச்செங் கோட்டிலோ பதும மலர் முத்தைச் சொரிகிறது. 403