பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 கவிஞர் கற்பனை “தாமரை மலர்களிலிருந்து முத்துக்கள் விழுவதாவது அவற்றை அருணகிரியார் பார்த்தாரா?' என்ற கேள்வி தோன்ற லாம். புலவர்கள் எதையேனும் சிறப்பிக்க வேண்டுமானால் அதைப் பெரிதாக்கிச் சொல்வது ஒரு சம்பிரதாயம். அருணகிரி நாதர் பெரும் புலவர். கற்பனையாகவும் மிகைப்படுத்தியும் சொல்வது அவருக்கு உரிமை. நாம் கண்ணிலே காணுகின்ற பொருளைவிட அவர் கற்பனையில் காணுகின்ற பொருள் பல காலத்திற்கு நிற்கிறது; சொல் வடிவிலே நிற்கிறது. தாமரை மலர்கள் முத்துக்களைச் சொரிகின்றன என்று சொல்வதனால் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய கருத்து என்ன? அங்கே நன்றாகத் தாமரை மலர்கள் மலர்கின்றன என்பதுதான். நீர்வளம் உடைய இடம் என்பதைக் கற்பனையால் சற்று உயர்த்திச் சொல்கிறார். 'அங்கே குமரன் இருக்கிறான். தாமரை மலர் மலர்ந்த இடத்தில், செங்கோட்டின்மேல் மாரனைக் குற்சிதம் செய்யும் பேரழகுடைய முத்துக்குமாரன் எழுந்தருளியிருக்கிறான். அவனை அந்தக் கோயிலுக்குச் சென்று காண வேண்டுமென்பதே இல்லை. எங்கேயாவது தனியே ஆசனம் போட்டு நினைக்க வேண்டும் என்பதும் இல்லை. எந்த இடத்தில், எந்தக் காலத்தில் நினைத் தாலும் அங்கே வந்து என் எதிரிலே தோன்றுகிறான்' என்கிறார். பக்குவம் முதிர்ந்துவிட்டமையினால் முன்னாலே சொன்ன அப்பி யாசங்கள் இல்லாமலேயே, எங்கே நினைத்தாலும், எப்போது நினைத்தாலும் பார்க்குமிடம் எல்லாம் அவனைக் காண்கிறவர் அருணகிரி நாதர். அபிராமி பட்டர் அநுபவம் இப்படி அருணகிரிநாத சுவாமிகள் மட்டும் சொன்னால் நம்மைப் போன்றவர்களுக்குக் கொஞ்சம் சந்தேகம் உண்டாகும். இந்த அநுபவம் உண்மையாக இருந்தால் வேறு பக்தர்களுக்கும் இது கிடைத்திருக்க வேண்டும். அப்படி யாராவது கிடைத்ததாகச் சொல்லியிருக்கிறார்களா? அநுபூதிமான்களுக்கு இந்த அநுபவம் கிடைக்கும். அப்படிப் பெற்ற அநுபூதிமான்களில் ஒருவர் அபிராமி 404