பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 கொங்கே தரளம் சொரியும்செங் கோடைக் குமரன்என எங்கே நினைப்பினும் அங்கேஎன் முன்வந்து எதிர்நிற்பனே. (செம்மையான நிறத்தைக் கொண்ட சினமுள்ள கூர்மையான முருகனது வேலும், அவனுடைய திருமுகங்களும், பக்கத்தில் வரிசையாக உள்ள நல்ல பன்னிரண்டு திருத்தோள்களுமாக, தாமரை மலரானது மணத்தையும் முத்தையும் சொரிகின்ற திருச்செங்கோட்டில் எழுந்தருளி யிருக்கும் குமரன் என்று எங்கே நினைத்தாலும் அங்கே அடியேனுடைய முன்னாலே வந்து எதிரே காட்சி தந்து நிற்பான். கேழ் - நிறம். அசுரரின் இரத்தம் தோய்தலால் செந்நிறம் பெற்றது. மாணிக்கம் பதித்த வேலாதலின் செந்நிறமுடையதாயிற்று என்பதும் ஆம். சினவடிவேல்: உடையானது சினம் கருவியின் மேல் ஏற்றப்பட்டது. சின்னமாகிய வடிவேல் என்றும் கொள்ளலாம். வடி - கூர்மை. பங்கு - பக்கம். நிரைத்த - வரிசையாக அமைந்த பதுமமலர் எழுவாய். பதும மலர்க் கொங்கே என்றும் பாடம். கொங்கு - மணம், பூந்தாதுமாகும். தரளம் - முத்து. செங்கோடை - திருச்செங்கோடு. எங்கே என்றது திருச் செங்கோடல்லாத பிற இடங்களை. எங்கே என்றதனோடு எப்பொழுது நினைத்தாலும் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நிற்பன் என்றது, மின்னலைப் போலே தோன்றி மறையாமல், நன்றாகத் தரிசித்து இன்புறும்படி நிற்பான் என்ற கருத்தை உடையது. 408