பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 ஒரிடத்திலும் பக்தி அதைத் தீர்க்கின்ற இடத்திலும் இருப்பது முறை. அந்த வகையில் பார்த்தால் இறைவனிடம் பக்தி வரும் போது அது பயபக்தியாக இருக்க வேண்டும். அதற்கு முன்பு பயம் உண்டாக வேண்டும்; அந்தப் பயம் வேறு ஒரிடத்தில் இருக்க வேண்டும். மரண பயம் மனிதனுக்குப் பலவகையான நிலைகளில் பயம் உண்டா கிறது. வயிற்றுப் பசிக்குப் பயந்து சாகிறான். மானத்திற்குப் பயப் படுகிறான். வறுமைக்குப் பயப்படுகிறான். இந்தப் பயங்களை எல்லாம் பெரிய வள்ளல்களால் தீர்த்துக் கொள்ளலாம். யாரிட மேனும் சோறு வாங்கியுண்டு பசியினால் உண்டாகும் பயத்தைப் போக்கலாம். உழைத்து வேலை செய்து பணம் சம்பாதித்து வறுமையினால் வரும் பயத்தைப் போக்கிக் கொள்ளலாம். நல்ல மருத்துவரை அண்டி நோயினால் வரும் பயத்தைப் போக்கிக் கொள்ளலாம். திருடர்களால் வரும் அச்சத்தைக் காவலர்களாலும் விலங்குகளால் வரும் அச்சத்தை ஆயுதங்களாலும் போக்கிக் கொள்ளலாம். இப்படி உலகத்தில் மனிதனுக்கு உண்டாகும் அச்சங்கள் பலவாக இருப்பதுபோல அவற்றைப் போக்கிப் பாதுகாத்துக்கொள்ளும் உதவிகளும் பலவாக இருக்கின்றன. ஆனால் இப்படி வரும் பயங்களுக்கு எல்லாம் மேலான பயமாக, யாராலும் மாற்ற முடியாத அச்சமாக இருப்பது மரண பயம். யமனால் உண்டாகும் துன்பத்தை உலகிலுள்ள யாராலும் நீக்க முடியாது. தொல்காப்பியம், 'மாற்றரும் கூற்றம்' என்று யமனைச் சொல்கிறது. எதனாலும் மாற்ற முடியாத யமன் என்பது பொருள். இன்ன காலத்தில் இன்னவனுடைய உயிரை அவன் உடம்பினின்றும் பிரிக்க வேண்டுமென்ற வரையறையைச் செய்துகொண்டு அந்தக் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிப்பத னால் கூற்றுவனுக்குக் காலன் என்ற பெயர் உண்டாயிற்று. அந்தக் காலத்திற்கு அணுவளவு முன்போ, பின்போ இல்லாமல் உயிரைப் பிரித்துக் கொண்டு போகிறவன் அவன். அவனால் உண்டாகும் பயத்தை உலகத்திலுள்ள யாராலும் தீர்க்க முடியாது. காலனுக்குக் காலனாக இருக்கும் ஒருவன்தான் போக்க முடியும். ஆகையால் காலனிடத்தில் பயமும், அது காரணமாகக் காலகாலனிடத்தில் 410