பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 வருகிறான். அவனைக் கண்டவுடன் காளை மாட்டுக்காரனுக்கு எல்லையில்லாக் களிப்பு உண்டாகிறது. பாதி வழியிலேயே மாடு களைத் திருப்பிக் கொண்டு வீட்டுக்குப் போய்க் கொட்டிலிலே கட்டிவிட்டு அவனோடு பேசப் போகிறான். அடுத்த வாரம் குளிப்பாட்டிக் கொள்ளலாமென்று நின்று விடுகிறான். மற்றொருவன் நாள்தோறும் நீராடும் பழக்கம் உடையவன். மூன்றாவது வகுப்பில் டெல்லிக்குப் பயணம் செய்கிறான். போகிற வழியில் நல்ல வசதி இல்லாமையினால் நீராட முடி கிறது இல்லை. ஏதோ கிடைத்ததைப் பசிக்கு உண்டு, இரண்டு மூன்று நாளைக் கழித்து டெல்லி போய் இறங்கின பிறகு நீராடுகிறான். இன்னும் ஒருவன் நாவல் படித்துக் கொண்டிருக் கிறான். அது துப்பறியும் நாவல். கதையிலே இன்னும் துப்புத் துலங்கவில்லை. துப்புத் துலங்கும் கட்டம் உள்ள அத்தியாயம் வருகிறது. அப்போது தாகமாக இருக்கிறது. தண்ணிர் குடிப்பதற் காக அருகில் உள்ள பையனைப் பார்த்து, 'நீர் கொண்டு வா என்று சொல்கிறான். அவன் கொண்டு வந்து நிற்கும் போது இவன் அந்த அத்தியாயத்தை முடித்துவிடலாமென்று தலையைக் குனிந்தபடியே படித்துக் கொண்டிருக்கிறான். படித்து முடித்த பிறகே தலையை நிமிர்ந்து பார்த்துத் தண்ணீரை வாங்கிப் பருகு கிறான். இன்னும் ஒருவன் சாப்பிட்டுவிட்டுக் கையைக் கழுவப் போகிறான். இடையில் ஒரு தந்தி வருகிறது. அவனுக்கு மிக வேண்டிய நண்பன் ஒருவன் இறந்துவிட்டதாக அந்தத் தந்தி சொல்கிறது. அதைக் கண்டு கண்ணிர் விட்டுக் கொண்டு கையில் நீர்விட்டுக் கழுவாமல் அரைமணி நேரம் நிற்கிறான். இப்படி உள்ள அத்தனை பேர்களுக்கும் தண்ணிர் அவசியம். ஆனால் காளை மாட்டுக்காரனுக்கு ஒருவாரம் தண்ணிர் காத்திருக் கலாம். டெல்லி செல்கிறவனுக்கு மூன்று நாள் காத்திருக்கலாம். கை கழுவுகிறவனுக்கு ஒரு மணி நேரம் காத்திருக்கிறது. நீர் வேட்கை இருக்கிறவனுக்குக் கால் மணி நேரம் காத்திருக்கிறது. வேறு ஒருவனுக்குத் தலையில் நெருப்புப் பிடித்துக் கொள் கிறது. "ஐயோ தண்ணீர், தண்ணீர் என்று ஒடுகிறான். அப்போது அவன் அருகில் ஒருவன் வந்து, "உனக்கு அல்வா என்றால் பிரியம் ஆயிற்றே! இந்தா இதை உண்ணு' என்றால் உண்ணு வானா? தண்ணீர் தண்ணீர் என்று கதறிக் கொண்டு ஓடுவான். 412