பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 உன்னைத் தொழுபவர்கள் ஆக மாட்டார்கள். இந்த உயிருக்கு ஒரு காலத்தில் மோசம் வந்துவிடும், நிச்சயமாக மரணம் என்று ஒன்று நம்மை அறியாமலே வந்து சேரும் என்ற பயத்தை உண்மையாக உணர்ந்து, உன்னுடைய பாதங்களை யார் தொழு கிறார்களோ அவர்களே மெய்யான பக்தி உடையவர்கள். அப்படி நான் செய்யவில்லையே! பயபக்தியுடன் உன் திருவடியைத் தொழ வேண்டுமென்ற நினைவுகூட எனக்கு இல்லையே!' என்று இரங்குகிறார். ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்து உன் அருள பதங்கள சேவிக்க என்று நினைக்கின்றிலேன் ஆவிக்கு மோசம் பொருளுக்கு மோசம் வருமென்று, வீடு கட்டிக் கதவு அமைத்து அதற்குத் தாழ்ப்பாளும் போடுகிறோம். பெட்டி வாங்கிப் பூட்டுகிறோம்; பூட்டுக்கு மேல் பூட்டுப் போடுகிறோம்; ஒரு வீட்டுக்கு இரண்டு பூட்டுகள் போட்டுப் பாதுகாக்கிறோம். இவை போதாவென்று கருதி வீட்டில் நாயையும், காவல்காரனை யும் வைக்கிறோம். இவையும் போதா என்று கருதி ஊரில் போலீஸ்காரனை வைத்திருக்கிறோம். இவ்வளவும் நாம் சேமித்த பொருளுக்கு மோசம் வரக் கூடாது என்பதற்காகச் செய்யும் காரியங்கள். நாம் பெற்ற பொருள்களுக்குள்ளேயே மிகச் சிறந்தது உயிர் நம்மை நாமே இழந்துவிடக் கூடாது. இந்த உயிரினால் வருகின்ற நன்மைகளை எல்லாம் பெறாமல் உடம்பை விட்டுப் பிரிந்து போனால் உடம்பை எடுத்ததன் உண்மையான பயன் உண்டாகாது. மரணம் அடையும்போது, செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து விட்டோம் என்ற மன நிறைவு இருந்தால், துன்பம் வராது. ஆகவே உடம்பு இருக்கும்போதே மரண பயத்தைப் போக்குவதற்குரிய நெறியில் ஒழுக வேண்டும். ஆவிக்கு மோசம் வருமென்ற உணர்ச்சி வேண்டும். அதற்குப் பெரிய சாத்திரங்களைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உலகத்தில் பிறந்த யாவருக்கும் இந்த உடம்பில் உயிர் நில்லாது என்ற உண்மை நன்றாகத் தெரியும். கடவுள் இல்லையென்று சொல்லுவார் இருக்கிறார்கள். சொர்க்க நரகங்கள் இல்லை யென்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். மோட்சம் இல்லை 414