பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பய பக்தி யென்று சாதிப்பவர்கள் இருக்கலாம். புண்ணிய பாவம் தர்மம் முதலாயின இல்லையென்று சொல்கிறவர்களும் இருக்கலாம். ஆனால் உடலிலிருந்து உயிர் போகாது என்று சொல்கிறவர் யாரும் இல்லை. இது யாவரும் அறிந்த உண்மை. உயிர் போகும் போது நாம் தத்தளித்து மிகவும் வருந்துவோம். அத்தகைய வருத்தம் வரக்கூடாது என்று கருதி அதற்கு முன்பே இறைவன் திருவருளைப் பெற வேண்டுமென்ற உறுதியோடு பக்தி செய்ய வேண்டும். அந்தப் பக்திக்கு மூலமாய் இருப்பது, யமன் வந்து உயிரைக் கொள்ளை கொள்ளுவானே' என்ற பயம். உயிருக்கு மோசம் வருமே என்ற பயம் அழுத்தமாக உண்டாகி, அதன் பயனாக இறைவனுடைய திருவடிகளைச் சேவிக்க வேண்டும். "அப்படிச் சேவிப்பது ஒன்று உண்டு என்பதையே நான் நினைக்க வில்லை" என்று அருணகிரியார் சொல்கிறார். முன்னை வினை அதற்குக் காரணம் என்ன? நல்லதை நினைப்பதற்கும் ஒரு தவம் வேண்டும். பூர்வ புண்ணியம் இருந்தால்தான் நல்ல எண்ணங்கள் நமக்கு எழும். 'தவமும் தவமுடையார்க் காகும்' என்று திருவள்ளுவர் கூறுவர். இறைவனிடத்தில் அன்பு செய் வதற்குக் காரணமாக இருக்கும் பயம் நமக்கு உண்டாக வேண்டு மானால் அது பலகாலப் பழக்கத்தினால் வரவேண்டும். முன் செய்த பாவம் அத்தகைய பழக்கம் உண்டாகாமல் தடுக்கும். எனவே, 'உன்னிடத்தில் பக்தி செய்து நலம் பெறுவதற்குத் தடை யாக இருக்கிற வினை, ஆவிக்கு மோசம் வரும் என்பதை அறியா மல் இருக்கும்படி செய்கிறது. அந்த வினையை நீ தீர்த்து அருள வேண்டும்' என்று முருகனை வேண்டுகிறார். ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்து உன் அருட்பதங்கள் சேவிக்க என்று நினைக்கின்றிலேன் வினைதீர்த்தருளாய்! உயிருக்கு மோசம் என்பது யமனால் வரும் மரணம். அதனைத் தீர்ப்பது இறைவனுடைய பாதம். அது அருள் வடிவமாக இருக் கின்றது. இறைவனுடைய அருள் மருளைப் போக்கும். ஆவிக்கு வருகின்ற துன்பத்தைப் போக்கும். ஆகையால் மரண பயத் திற்குப் பாதுகாப்பான ஆண்டவனுடைய பாதங்களை அருள் பதங்கள் என்று சொன்னார். 45