பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதலைக் கொள்ளி எறும்பு 'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்' என்பது திருக்குறள். பல வகையான பற்றுக்களை உள்ளத்தில் ஏற்றிக் கொண்டு எந்தப் பக்கம் திரும்பினாலும் சேற்றிலே அமிழ்வது போலப் பாசத்திலே அமிழ்ந்து கொண்டிருக்கிறோம். என்றைக்காவது சிறிது உணர்வு வந்து அவற்றிலிருந்து விடுபட வேண்டுமென்றால் முடிவதில்லை; எந்தப் பக்கத்திலும் நம்மை அழுத்துகின்ற பாசம் இருப்பதைப் பார்க்கிறோம். பாசத்தைவிட்டு நீங்குவதற்கு ஒரு சிறிய வழிகூடக் காணாமல் திண்டாடுகிறோம். பற்றினால் அமைதியின்மை கல்யாணம் பண்ணிக்கொண்டு மனைவியோடு வாழ்கிறவன் சிறிது நேரம் கடவுளை எண்ணலாம் என்றால், மனைவியோடு பேசிவிட்டு அவள் தூங்கும்போது எண்ணலாம் என்ற நினைவு வருகிறது. மனைவியோடு பேசி அவள் தூங்கின பிறகோ, 'நாமும் தூங்கிவிடலாம்; நாளைக்குத் தியானம் பண்ணிக் கொண் டால் போகிறது என்ற நினைவு வருகிறது. மறுநாள் எழுந் தாலோ கடைகண்ணிக்குப் போகிற வேலை முன்னாலே வந்து நிற்கிறது. இன்று இரவு அவசியம் நாம் தனித்திருந்து தியானம் பண்ண வேண்டும்’ என்று நினைக்கிறோம். அந்த இரவு நமக்கு வேண்டிய நண்பர் ஒருவர் வந்துவிடுகிறார். அவர் தினந்தோறுமா வருகிறார்? இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வருகிறவரோடு பேசாமல் என்ன செய்வது? தியானம் எங்கே போகிறது? நாளைக்குப் பண்ணிக் கொள்ளலாம்' என்று மறுநாளைக்கு ஒத்திப் போடுகிறார். அடுத்த நாள் நமக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது; சிறிது ஜூரம் வருகிறது. அன்றைக்கும் தியானம் செய்ய முடிவதில்லை. இப்படியாக ஒவ்வொரு நாளும் நாம் அமைத்துக் கொண்ட பற்றுகள் காரணமாகச் சிறிது நேரம் ஒய்வாகவும், அமைதியாகவும் இருக்க வழி பிறப்பது இல்லை. மற்றவற்றைத் தள்ளிப் போடுவதில்லை; இதை மாத்திரம் எளிதிலே தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம். இப்படியின்றி எந்தக் காரியம் இருந்தாலும் இல்லாவிட்டா லும் இறைவனைத் தியானம் பண்ணுவது அவசியம் என்ற உணர்ச்சி இருந்தால் எப்படியாவது அந்த நேரத்தில் தனிமையை க.சொ.VI-27 421