பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதலைக் கொள்ளி எறும்பு இந்த இரண்டுக்கும் நடுவில் உள்ள வாழ்க்கையில் நின்று குலை கிறோம். இப்படி ஒரு பொருள் சொல்லலாம். சென்ற பிறவியில் நாம் செய்திருக்கும் புண்ணிய பாவங்கள் இந்தப் பிறவியில் வந்து பயனைத் தருகின்றன. இவற்றை ஊழ் வினை என்றும் பிராரப்தம் என்றும் சொல்வார்கள். அதன்படி நம்முடைய அநுபவங்கள் அமைகின்றன. ஆனால் இந்த வாழ்க்கை யில் நமக்குரிய கருவி கரணங்களை எல்லாம் கொண்டு பல செயல்களைச் செய்கிறோம். முன்னைப் பிறவியில் நாம் செய்த செயல்களின் விளைவாகப் புண்ணிய பாவங்கள் நமக்குக் கிடைத்தன. அவற்றின் பயனைச் சுகமாகவும் துக்கமாகவும் இந்தப் பிறவியில் அடைகிறோம். முன்னை வினையின் விளைவு இது. இந்த அநுபவம் அன்றி, புதிய செயல்களைச் செய்கிறோம். அந்தச் செயல்களின் பயன் அடுத்த பிறவியில் கிடைக்கும். எனவே இந்தப் பிறவியில் முன்னை வினைப் பயனால் வரும் அநுபவமும், புதுச் செயல்களினால் வரும் புண்ணிய பாவங் களும் இருக்கின்றன. இந்த இரண்டுக்கும் நடுவில் நாம் குலைந்து நிற்கிறோம். . . . அநுபவம் இப்படி வருகிறதே என்று பார்த்தால் அதற்கு மூலகாரணம் முன்னை வினை என்று தெரிகிறது. அந்த அது பவத்தை மாத்திரம் அநுபவித்துச் செயல் இல்லாமல் இருக்க லாமே என்றால், நம்முடைய மன நிலை அதற்கு அமைந்ததாக இல்லை. ஏதாவது செய்து கொண்டே இருக்கிறோம். இப்படி முன்னை வினையின் விளைவுக்கும், இப்போது செய்யும் செயலுக்கும் இடையில் நின்று திண்டாடுகிறோம். இதுவும் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைதான். நம்முடைய வாழ்க்கையில் நமக்கே சில சமயங்களில் சில எண்ணங்கள் தோன்றுவது உண்டு. வேறு சிலருடைய அறிவுரை களையும் ஏற்றுக் கொள்கிறோம். திண்மையான மனம், தன் னுடைய எண்ணத்தில் சிறந்தன் இருந்தாலும் பிறர் உபதேசங் களில் சிறந்தன. இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும். அது இல்லாத வனுக்குப் பிறர் உபதேசம் செய்கிறபோது நல்லதாகத் தோற்றும். அடுத்தபடி அதற்கு மாறாகத் தன் எண்ணமே சிறந்ததாகத் தோற் றும். இப்படி நம்முடைய அறிவுக்கும், பிறருடைய உபதேசத் 425