பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலாபப் புரவியும் தனிவேலும் முருகப் பெருமானுடைய திருவடியைக் கடம்ப மலரால் அருச்சித்து வழிபடும்போது அத்திருவடியில் மனமலரையும் இட்டு வழிபட வேண்டும் என்பதைச் சென்ற பாட்டில் அருண கிரியார் சொன்னார். மன மலருக்கும், கை மலருக்கும் லட்சிய மாக இருப்பது ஆண்டவனுடைய திருவடி. இந்த எண்ணம் வந்தவுடன் மேலும் அந்தத் திருவடியை நினைக்கிறார். முருகப் பெருமான் அந்தத் திருவடிவிலே வீர கண்டையை அணிந்திருக் கிறான். கற்பனைக் காட்சி இங்கே ஒரு கற்பனைக் காட்சியை எண்ணிப் பார்க்கலாம். முருகப் பெருமான் கந்தலோகத்தில் இருக்கிறான். தன் சின்னஞ் சிறு கரத்தில் வேலை வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஒடிக் கொண்டிருக்கிறான். அருகில் மயில் நிற்கிறது. அப்போது உமா தேவி அங்கே தோன்றி தன் குழந்தையை வா என்று அழைத்து அலங்காரம் பண்ணத் தொடங்குகிறாள். 'தேட அரிய மணியரைஞாண் சேர்க்க வருக விரற்காழி செறிக்க வருக திலதநுதல் தீட்ட வருக!” என்று அழைக்கிறான். முருகன் அருகில் சென்று நிற்க, கால் முதல் தலைவரைக்கும் பலவகை அணிகளை அணிந்து கண்ணாரக் காண்கிறாள். அவனுடைய திருவடியில் தண்டையும், சிலம்பும், வெண்டையமும் பூட்டி, அவன் நடைபோடும் போது அவை ஒலிப்பதைக் கேட்டு இன்புறுகிறாள். தன்னுடைய தாய் இத்தனை அணிகளையும் பூட்டி அழகு காண்பதைக் கண்ட குழந்தை தானே ஒர் ஆபரணத்தைப் பூட்டிக் கொள்ள விரும்புகிறான். அதனை அம்பிகை பார்க்கிறாள். அவன் எதைப் பூட்டிக் கொள்கிறான்? கழுத்துக்கோ கைக்கோ எந்த அணியையும் அணிந்து கொள்ளவில்லை. வீர