பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்த்துணை அஞ்சாமையும் அச்சமும் கோழைகள் எதற்கும் அஞ்சுவார்கள், வீரர்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள் என்று பொதுவாகச் சொல்கிறோம். ஆனால், வீரர்களும் அஞ்சுகின்ற நிகழ்ச்சிகள் உண்டு. அஞ்சுவதற்கு உரியனவற்றைக் கண்டு அஞ்சுவது ஒரு நல்ல இயல்பு. 'அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்’ என்று வள்ளுவர் சொல்வார். வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்கள் வருகின்றன. அந்தத் துன்பங்களைக் கண்டு நாம் அஞ்சுகிறோம். துன்பங்கள் பலவானாலும் ஒருவாறு பசி, பகை, பிணி என்ற மூன்றுக்குள் அடக்கலாம். பழங்காலத்தில் மக்களைக் காப்பாற்றிய அரசர்கள் பகையும், பசியும், பிணியும் தவிர்ந்து குடி மக்கள் நல்வாழ்வு பெறும்படி செய்தார்களாம். நாம் அஞ்சு வதற்குரிய பொல்லாதவர்கள் யாராக இருந்தாலும் அவரைப் பகை என்பதில் அடக்கிவிடலாம். உடம்புக்கு வருகின்றது நோய். வயிற்றுக்கு வருகிறது பசி. பகையையும் நோயையும் இல்லாமல் பண்ணினாலும் பசியை இல்லாமல் பண்ண முடியாது. உடம்பு ஆரோக்கியமாக இருப்பதற்குப் பசி அறிகுறி என்று நினைக்கி றோம். பசியைப் போக்குவதற்கு உணவைத் தேட வேண்டியிருக் கிறது. இப்படி மனிதன் அஞ்சுவதற்குரிய பல நிகழ்ச்சிகள் வாழ்நாளில் இருந்து கொண்டிருக்கின்றன. அஞ்சாமல் வாழ்வதற் குரிய வகை இந்த மனித பிறவியில் இருப்பதாகத் தெரியவில்லை அஞ்சுவதற்குரியன வந்தாலும் அஞ்சாமல் இருக்கும் மன நிலை உள்ளவர்களும் இருக்கிறார்கள். பகையைக் கண்டு அஞ்சா மல், தம்முடைய வீர மிடுக்கைக் காட்டுவதற்கு ஏற்ற வாய்ப்பு இது என்று எண்ணிக் கொதித்து எழுகின்ற வீரர்கள் இருக்கிறார் கள். பிணியைக் கண்டு அஞ்சாமல், அதனைப் போக்குவதற்குரிய மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் வாழ்கின்றவர்