பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்த்துணை அறைகூவும் முறையிலும் சொல்வார். இப்படிச் சொல்கின்ற வருடைய உள்ளம் எவ்வளவு உறுதியானது பயத்தைப் போக்க வேண்டுமானால் நாமும் தைரியத்தோடு இருக்க வேண்டும். அஞ்சாமைப் பயிற்சி என்னுடைய சிறு வயதில் ஒரு பெரியவர் எனக்கு நல்ல உபதேசம் செய்து வந்தார். அவர் பய உணர்ச்சியைப் பற்றிச் சில யோசனைகளை எனக்குச் சொன்னார். 'பயம் தோன்றும் போதெல்லாம் அந்தப் பயத்திற்கு மூலகாரணமான பொருளை நீ தொலைத்துவிடுவதாகப் பாவனை பண்ணிக்கொள். அப்போது பயம் போய்விடும்' என்று சொன்னார். அந்த உபதேசத்தைக் கேட்ட காலத்தில் எனக்குப் பதினைந்து பிராயம் இருக்கும். பூச்சாண்டி, பேய், பிசாசு என்று கேட்டுக் கேட்டுப் பயம் கொள்ளும் பருவம் அது. அந்தப் பெரியவர் செய்த உபதேசத்தினால் எனக்கு ஒரு துணிவு எழுந்தது. அவர் சொல்கிற முறையைப் பரீட்சை பண்ணிப் பார்க்கலாம் என்று எண்ணினேன். பிசாசு வருவதாகப் பயம் வந்தால் கையில் ஒரு வாள் இருப்பதாக எண்ணி, அந்த வாளை எடுத்து அதை வெட்டுவதாக நான் பாவனை செய்வேன். இந்தப் பழக்கத்தினால் தைரியம் எனக்குச் சிறிது உண்டாயிற்று. எங்கள் ஊரில் ஆற்றங்கரையில் மயானம் இருக்கிறது, அங்கே இரண்டு மூன்று பனைமரங்கள் நிற்கும். ஊருக்குப் புறம் பான இடம் அது. என்னுடைய தைரியத்தைச் சோதிப்பதற்காகப் பாதி ராத்திரியில் எழுந்து ஆற்றங்கரைக்குச் செல்வேன். முதலில் பயம் குடலைக் குழப்பும். பின்பு அந்தப் பனைமரங்களைப் பார்க்கும்போது பிசாசுகள் நெடிய உருவம் எடுத்து வந்து நிற்பன போலத் தோன்றும். 'உன்னைத் தொலைத்து விடுகிறேன் பார்” என்று வெளிப்படையாக உரக்கச் சொல்லிக் கொண்டு, கையில் கத்தி இருப்பது போல எண்ணி, "இதோ வெட்டி விட்டேன்' என்று சொல்வேன். இப்படிப் பயிற்சி பண்ணினதால் என்னுடைய மனசுக்குத் தைரியம் மிகுதியாயிற்று. அருணகிரியார் செய்த உபகாரம் பெரியவர்கள் காலனால் வருகின்ற அச்சத்தைப் போக்கு வதற்குக் காலகாலனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று 435