பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 சொன்னதோடு, காலனால் எந்தப் பயமும் உண்டாகாது என்பதை வற்புறுத்திச் சொல்லியிருக்கிறார்கள். இத்தகைய பாடல்களை நாம் பல முறை பாராயணம் பண்ணியும், மனனம் செய்தும் சொல்லி வந்தால் நமக்கு மரண பயம் ஒருவாறு நீங்கும். புலி அடிப்பதைவிடக் கிலி அடிப்பது அதிகம் என்பது பழமொழி. யமன் வருவதற்கு முன்னாலேயே அவனை எண்ணிச் சாவதில் பயன் இல்லை. இறைவன் திருவருள் நம்மைக் காப்பாற்றும் என்ற தைரியத்தோடு, எமனை அறைகூவி அழைக்கும் பாடல் களையும் பயின்று வந்தால் நம் மனம் திண்மை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆகவே அருணகிரிநாத சுவாமிகள் நமக்குத் தந்த பெரிய வரம் இத்தகைய பாடல்கள் என்பதை நினைவு கொள்ள வேண்டும். அநுபவத்தில், பலமுறை சொல்லிப் பார்த்தால் இதனைத் தெரிந்து கொள்ளலாம். மன இயல் அறிஞர் கருத்து இதை எழுதிய போது ரீடர்ஸ் டைஜெஸ்ட் என்ற பத்திரிகையில் உள்ள கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. பாவனையினால் நலம் பெறலாம் என்பதை ஒரு மன இயலறிஞர் அந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறார். நான் அறிந்த சிறந்த மருந்து' என்ற தலைப்பிட்டு அந்தக் கட்டுரையை எழுதியிருக் கிறார். அவர் ஐந்து விதமான மனப் பயிற்சிகளைச் சொல்கிறார். (1) உன்னுள் மறைந்திருக்கும் சக்தியை உண்மையாகக் கருதி நம்பிக்கை வை; (2) அதனிடம் புகலடைவதற்கு விருப்பங் கொள்; (3) பிரார்த்தனை செய்; (4) அமைதியும் மெளனமும் பயில்; (5) நன்மை உண்டாகும் என்று பாவனை செய் என்பன அந்த ஐந்தும். ஐந்தாவதை 'ஆட்டோ ஸஜ்ஜெஷன் (Auto suggestion) என்று சொல்வார்கள். இதனால் நன்மை உண்டாகும் என்பதை உதாரணங்களால் அவர் விளக்குகிறார். 'ஒரு சமயம் ஒரு வியாபார நிலையத்தில் விற்பனைக் கலைஞராக இருந்த இருவர் நம்பிக்கையினால் நலம் பெற்றது எனக்குத் தெரியும். இயல்பாகவே அவர் சங்கோசப் பிராணி. ஆனால் அவர் நல்ல பாவனை செய்யும் பழக்கத்தினால் ஆச்சரியமான நன்மையைப் 1. The best prescription I know' by Dr. Smiley Blanton in Reader's Digest for October, 1963, p. 132 : 436