பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 நூற் பெயர்கள் திருவாக்கு என்ற பொருளையே உடையவை. மற்றப் பேச்சைவிட அவர்கள் பாடிய பாடல்கள் மிகச் சிறந்த அமைப்பை உடையனவாகும். பலகாலம் நிற்கும் தன்மை உடையனவாகவும், பல்லாயிரக் கணக்கான மக்களுக்குக் காலம் கடந்து, இடம் கடந்து பயன் தருவனவாகவும் இருக்கும். திருவாக்கின் பயன் அந்தப் பயன் இன்னது என்று அநுபவித்தவர்கள்தாம் உணர்வார்கள். ஆனாலும் இதனால் இன்ன பயன் என்று தெரிந்து கொள்வதற்குச் சில குறிப்புகளை ஆசிரியர்களே அமைப்பார்கள். நூலுக்குப் பொதுப் பாயிரம் என்றும் சிறப்புப் பாயிரம் என்றும் இரண்டு வகை உண்டு. அவற்றில் சிறப்புப் பாயிரம் என்பது குறிப்பிட்ட நூலைப் பற்றிய செய்திகளைத் தருவது. அது சிறப் பான எட்டுக் கூறுகளைச் சொல்வது; சிறப்பில்லாத மூன்றையும் சொல்வது உண்டு என்று இலக்கண நூல்கள் கூறுகின்றன. ஆக்கியோன் பெயர், நூல் வந்த வழி, நூல் வழங்கும் எல்லை, நூலின் பெயர், நூல் அமைந்த யாப்பு, நூலில் உள்ள பொருள், நூலைக் கேட்கும் தகுதி உடையோர், நூலால் உண்டாகும் பயன் என்பவை எட்டுச் சிறப்பான கூறுகள். நூல் உண்டானதற்குக் காரணம், நூல் அரங்கேற்றிய இடம், நூலின் காலம் என்பன சிறப்பு இல்லாதவை. சிறப்பான எட்டுக் கூறுகளில் கடைசியாக வைத்திருப்பது பயன். பொதுவாக எல்லா நூல்களுக்கும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் பெறுதல் பயன் என்று சொல்வார்கள். ஆனாலும் அந்தப் பயனுக்குவகையான சில பயன்கள் உண்டு. சட்ட நூலைக் கற்றவனுக்கு சட்ட அறிவு பெறுவது பயன். இசை நூலைக் கற்றவனுக்கு இசை பற்றிய அறிவு உண்டாவது பயன். அதுபோல் இறைவனுடைய துதி நூல்களைப் படிக்கின்றவர்களுக்குப் பக்தி உண்டாதல் பயன். இப்படி அந்த அந்த நூல்களுக்கு ஏற்ற பயன்கள் உண்டு. பாடம் சொல்பவர்கள் அவற்றைப் புலப்படுத்துவார்கள். நூலுக் குரிய பயன் இன்னது என்று அந்த நூலை இயற்றிய ஆசிரியரே சொல்வதும் உண்டு. இதனை வடமொழியில் பலசுருதி என்று சொல்வார்கள். கம்பராமாயணத்தின் பயனைச் சொல்ல வந்த 495 LDL!fT, 444