பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன் 'நாடிய பொருள்கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம் விடியல் வழிய தாக்கும் வேரியங் கமலை நோக்கும் நீடிய அரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை சூடிய சிலைஇ ராமன் தோள்வலி கூறு வோர்க்கே" என்று சொன்னார். தேவாரத்தில் ஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும், இந்தப் பதிகத்தைப் பாடினால் இன்ன பயன் உண்டாகும் என்று சொல்லியிருக்கிறார்கள். முதல் திருப்பதிகத்தில், "ஒருநெறியமனம் வைத்துணர் ஞானசம் பந்தன் உரைசெய்த திருநெறியதமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே" என்று பயனைச் சொல்கிறார் ஞானசம்பந்தர். ஒவ்வொரு பதிகத்தின் கடைசியிலும் உள்ள பயனைத் திருக்கடைக் காப்பு என்று சொல்வது வழக்கம். எல்லா நூல்களிலும் வெளிப் படையாகப் பயனைச் சொல்லாவிட்டாலும் அது குறிப்பாகப் பெறப்படும். , , , அலங்காரத்தின் பயன் அருணகிரிநாத சுவாமிகள் கந்தர் அலங்காரம் என்ற ஒர் அரிய மாணிக்க மாலையை நமக்குத் தந்தார். காப்புப் பாடல் ஒன்றும், நூலில் உள்ள பாடல் நூறும், பொங்கி வழிந்த பாடல் கள் ஆறும் ஆகிய நூற்றேழு பாடல்களை நாம் பார்த்தோம். இனி ஒரு பாடல் எஞ்சி நிற்கிறது. அதுவும் சேர்ந்தால் அழகான ஜப மாலையில் 108 ருத்திராட்ச மணிகள் அமைந்ததுபோல 108 பாடல்கள் அமைந்திருப்பதைக் காணலாம். இப்போது பார்க்கப் போகிற பாடல் கந்தர் அலங்காரத்தின் பயனாக உள்ளது. கந்தர் அலங்காரத்தைப் படிப்பதனால் நமக்கு உண்டாகும் பயன் முருகப்பெருமானிடத்தில் பக்தி உண்டாகி உள்ளம் நெகிழ் வது, உள்ளத்தில் உள்ள தளர்ச்சி போய் உறுதிப்பாடு உண்டாதல், தமிழ் இன்பம் நுகர்தல் முதலியன என்று சொல்லலாம். இவற்றுக்கும் மேலே அருணகிரியார் வேறு சில பயன்களைச் சொல்கிறார். "கந்தர் அலங்காரம் முழுவதும் படிக்க வேண்டும் என்பதில்லை. இந்த நூறு பாடல்களில் ஒரு பாட்டைப் படித் தாலே இன்ன இன்ன பயன் உண்டாகும்' என்ற முறையில் இந்தப் பாட்டை அமைக்கிறார். - 445