பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 முறைகளை மறந்து தம்முடைய ஆணையைப் பெருக்கினார்கள். தம்முடைய குடும்பத்தினர் சுகமாக இருக்க விரும்பினார்கள். நீதியை மறந்து, ஒழுக்கத்தை மறந்து எத்தனையோ தவறுகளைச் செய்தார்கள். வேந்தரால் வரும் அச்சம் குடிமக்களுக்குப் பிறரால் வருகின்ற அச்சத்தைப் போக்கு வது அரசர் கடமை. தம்மாலும், தம்முடைய உறவினர்களாலும், அதிகாரிகளாலும், விலங்குகளாலும், திருடர்களாலும், பகைவர் களாலும் வரும் பயத்தைப் போக்கிச் சமாதானத்தை நிலைநிறுத்த வேண்டும். அப்படி இல்லாமல் கொடுங்கோல் மன்னர்கள் தம்மைக் கண்டு எல்லோரும் அஞ்சும்படி செய்வார்கள். அதுமட்டுமன்று, சிற்றரசர்கள் அங்கங்கே வாழ்ந்து கொண்டிருந்தால் எப்போது பார்த்தாலும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒரு வரைக் கண்டால் மற்றொருவருக்குப் பொறாமை. ஒரு நாட்டில் நடைபெறும் சண்டையினால் அந்த நாட்டிலுள்ள மக்களுக்கும் துன்பம் உண்டாகும். போர் நிகழும் காலத்தில் மக்களுடைய வாழ்வில் பலவகையான அவலங்கள் உண்டாவதை நாம் அநுபவத்தில் உணருகிறோம். ஒரு காரணமும் இல்லாமல் தங்களுடைய சொந்த நலனை எண்ணி அரசர்கள் பிற அரசர்களோடு போரிட்டுக் கொண்ட காலம் அது. எந்தச் சமயத் தில் எந்த மன்னன் எந்த மன்னனை அடிப்பானோ, எப்போது போர் வந்துவிடுமோ என்று மக்கள் அஞ்சி இருந்தார்கள். மன்ன ருக்கும் மன்னருக்கும் ஒற்றுமை வளரவில்லை. அவர்களுக்குள் எப்போதும் காழ்ப்பும், பொறாமையும் வளர்ந்து கொண்டே வந்தன. அதனால் அவர்கள் துன்பப்பட்டதோடு அல்லாமல் அவர்களுடைய ஆட்சிக்குக் கீழ் அடங்கிய மக்களும் துன்பப் படும்படி செய்தார்கள். வாழ்க்கை முழுவதுமே இத்தகைய பயத்தை வைத்துக் கொண்டு மக்கள் வாழ்ந்தார்கள். ஆகவே, குடிமக்களுடைய உள்ளத்தில் இருந்த அச்சங்களுள் பெரிய அச்சம் வேந்தருக்கு அஞ்சும் அச்சம். அத்தகைய அச்சத்தைக் கந்தர் அலங்காரம் படிக்கிறவர்கள் போக்கிவிடுவார்களாம். முதலில் இந்தப் பயனைச் சொல்கிறார் அருணகியார். தமக்குள்ளே கோபித்து பொருகின்ற வேந்தர்களுக்கும் அஞ்சமாட்டார்கள் என்று தொடங்குகிறார். 448