பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன் சலம் காணும் வேந்தர் தமக்கும் அஞ்சார், இறைவனுடைய திருவருளை நம்பி அவனைத் துதித்து வாழ் கின்றவர்களுக்கு உள்ளம் சாந்தி பெற்றிருக்கும் ஆதலின் அவர் களுக்கு இத்தகைய அச்சம் இராது. மரண பயம் இனி அடுத்தபடி, இம்மையின் முடிவாகிய நிலைக்கு வருகிறார். இந்த வாழ்வின் முடிவில்தான் நமக்கு மரணம் வரு கிறது. அதைப்பற்றித்தான் சென்ற பாட்டில் பார்த்தோம். கையில் ஆயுதங்களை ஏந்தியபடி எருமை மாட்டு வாகனத்தில் ஏறிக் கொண்டு நம்மோடு சண்டையிட வருபவனைப் போல எமன் வருகிறான். சண்டையிடும்போதுதான் ஆயுதங்களைப் பிடிப்பது வழக்கம். அவன் ஆயுதங்களைத் தூக்கி எறிந்துவிட்டு வந்தாலும் நாம் எதிர்க்கப் போவதில்லை. ஆனால் அவனோ சண்டைக்கு வருபவனைப் போலத்தான் வருகிறான். கந்தர் அலங்கார நூலைக் கற்றவர்கள் அருணகிரிநாத சுவாமிகளின் அற்புதமான பாட்டின் சிறப்பினால் எமனுக்கும் அஞ்சமாட்டார்கள். யமன் சண்டைக்கு அஞ்சார் இம்மையின் இறுதியில் உண்டாகும் அச்சம் இது. நரகத் துன்பம் அடுத்தபடி மறுமையில் உண்டாகும் அச்சத்தைச் சொல்ல வருகிறார். இம்மை, மறுமை, வீடு என்று மூன்றைச் சொல்வார் கள். இம்மை என்பது இகவாழ்வு. மறுமை என்பது சொர்க்க நரக வாழ்வு. வீடு என்பது எல்லாவற்றையும் கடந்த, என்றைக்கும் மாறாத இன்ப வாழ்வு. மறுமையாகிய சொர்க்கமும் நரகமும் முறையே புண்ணியத்தாலும் பாவத்தினாலும் கிடைப்பன. சொர்க்க மாக இருந்தால் நமக்கு அச்சம் இல்லை. ஆனால் நரகமாயின் அச்சம் உண்டாகும். இந்த உடம்பை விட்டுச் சென்றால் எந்த நரகத்திற்குப் போவோமோ என்ற கவலை அலங்காரம் படிப்பவர் களுக்கு இல்லையாம். நரகத்தைக் குழி என்று சொல்வார்கள் அது தனக்குள் வீழ்ந்த ஆருயிர்களை அமிழ்த்தித் துன்புறுத் வதனால் அப்படிச் சொன்னார்கள். அது ஒரே இருளாக இருக்கு 449