பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 நரகத்திற்கு இருள் என்றும் ஒரு பெயர் உண்டு. சொர்க்கமோ ஒளி மயமாக இருக்கும். சொர்க்க போகத்தை நுகர்பவர்கள் தேவர்கள். சொர்க்க லோகத்துக் குடிமக்களாகிய அவர்கள் ஒளிபடைத்த திருமேனியை உடையவர்கள். தேவர் என்ற சொல்லுக்கே ஒளி படைத்தவர் என்பது பொருள். சொர்க்கம் என்பது விளக்கத்தோடு இருக்கும். அங்கே இருளே இல்லை. அங்கு இருக்கும் தேவர்கள் இமைப்பது இல்லை; தூங்குவதும் இல்லை. ஆனால் நரகமோ அதற்கு நேர்மாறாக இருப்பது. அங்கே வெளிச்சமே இல்லை. இருள் மண்டிக் கிடக்கும். பள்ளங்கள் நிறைந்தது. எப்போதும் அழுகையும் துயரமும் இருட்டும் நிறைந்த இடம் அது. தண் டனையை அநுபவிக்கின்ற பெரிய நாடு அது. அது என்றைக்கும் துலங்காது. அத்தகைய குழிக்குப் பக்கத்திலேகூடப் போக மாட்டார்கள் அன்பர்கள். நரகத்தில் இடர்ப்படோம்” என்று அப்பர் சுவாமிகள் சொல்வார் இந்த உலகத்தில் பல வகையான குற்றங்களைச் செய்து பாவத்தை ஈட்டியவர்களுக்குத்தான் நரகக்குழிக்குப் போகும் நிலை உண்டாகும். முருகப்பெருமானுடைய திருவருளால் தம் முடைய மனத்தை அமைதி பெறச் செய்து எண்ணங்களில் நன்மையும், உரையில் நேர்மையும், செயல்களில் தீங்கு இல்லாத் தன்மையும் பெற்றவர்களுக்கு இம்மை கடந்த மறுமையில் துன்பமே இல்லை. கந்தர் அலங்காரத்தைப் படிப்பவர்கள், அந்த வகையில் பயிற்சி பெறுவதால் அவர்களுக்கு இம்மை மாறி மறுமை வரும் போது நரகக் குழிக்குச் சென்று துன்புறுதல் இல்லை. துலங்கா நரகக்குழி அணுகார் இம்மையில் உள்ள பெரிய அச்சத்தையும், இம்மையின் இறுதியில் உள்ள மரண அச்சத்தையும் போக்கும் கந்தர் அலங் காரம் என்றார். நோயால் வரும் துன்பம் இனி, இந்த வாழ்வில் எத்தனையோ துன்பங்கள் நமக்கு கின்றன. அவற்றை ஆதியாத்மிகம், ஆதி தெய்விகம், ஆதி 450