பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன் இந்தப் பாட்டின் அமைப்புத் தனி முறையில் அமைந் திருக்கிறது. பயன் என்பது இது கிடைக்கும் என்று சொல்வது. ஆனால் இவை வாரா என்று அருணகிரியார் சொல்கிறார். குற்றம் நீங்கும், குணம் சாரும் என்று இரண்டையும் சேர்த்துச் சொல் வதும் உண்டு. இந்தப் பாட்டு முழுவதிலுமே இது வராது, அது வராது என்று சொல்கிறார். வேந்தர் அச்சம் போகும், எமனுடைய அச்சம் போகும், நரகக் குழி அச்சம் போகும், துட்ட நோய் அச்சம் போகும், விலங்குகளின் அச்சம் போகும் என்று ஐந்து அச்சத்தைச் சொல்கிறார். இவை போகும் என்பதைச் சொன்னவர் இன்னது வரும் என்று சொல்லவில்லை. இருள் நிரம்பிய ஒரிடத்தில் இருக்கிறவனுக்கு இருள் போய் விடும் என்று சொன்னாலே போதுமானது. ஒளி வரும் என்பது அதற்குள் அடங்கிக் கிடக்கிறது. பசித்தவன் ஒருவனைப் பார்த்து உன் பசியைப் போக்குகிறேன் என்றால், சோறு தருகிறேன் என்பதுதான் பொருள். அப்படி அச்சம் நீங்கும் என்றால், அதி லிருந்து அச்சம் இல்லாத அநுபூதி கிடைக்கும் என்ற குறிப்புப் பொருளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். உலக வாழ்வில் துன்புறுகிற மக்களுக்கு முதலில் துன்ப நீக்கம் வேண்டும். பின்பு இன்ப ஆக்கம் வேண்டும். துன்புறுகிறவர்களே மிகுதியாக இருக்கிற உலகத்தில், "உனக்குத் துன்பம் போய்விடும்" என்று சொல்ல வேண்டியதுதானே அவசியம்? இரக்கம் உடையவர்கள் முதலில் அதைத்தான் சொல்வார்கள். அபய வரதம் ஆண்டவன் திருக்கரங்களில் இரண்டில் ஒன்று அபயத் தையும் மற்றொன்று வரதத்தையும் காட்டுகின்றன. வலக்கை அபயத்தையும், இடக்கை வரதத்தையும் காட்டுகின்றன. அபயம் என்பது அஞ்சேல் என்ற குறிப்புடையது; வரதம் என்பது என் திருவடியை அடைந்தால் அருள் பெறலாம் என்று காட்டுவது. அருள்தான் முக்கியம். ஆனால் மக்களுக்கு முதலில் அச்சம் போக வேண்டும். பின்புதான் அருளினால் பயன் உண்டாகும். வயிற்று வலிக்காரனுக்குச் சோற்றைக் கொடுத்தால் பயன் இல்லை. முதலில் வயிற்று வலியைத் தீர்த்துப் பின்பே உணவை அளிக்க வேண்டும். அச்சம் உடையவனுக்கு அரிய பொருள் கிடைத்தால் 455