பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 அதன் பெருமை தெரியாமல் உதறித் தள்ளி விடுவான். அது குறித்தே முதலில் நாம் காண வலக்கையினால் அஞ்சேல் என்பதைக் காட்டுகிறான் இறைவன். வலக்கைதானே சிறந்த கை? அந்தக் கையை முதலில் பார்க்க வேண்டும். அதைப் பார்த்து அவனை அணுகினால் நம்முடைய அச்சத்தை அவன் முதலில் போக்கிவிட்டுப் பின்பு நாம் இன்பம் அடைகிற இடம் இங்கே இருக்கிறது என்பதைக் காட்டுவான். ஆண்டவனுடைய இடக்கை அவன் திருவடியைச் சுட்டிக்காட்டி, அதை அடைந் தவருக்கு அருள் செய்யும். அருள் செய்வது இடத் திருக்கரம். இடத் திருக்கரத்துக்கு முன்பே துன்பத்தினை நீக்கி முதலில் பயன் தருவது அபயம் காட்டும் திருக்கரம். இந்தப் பாட்டு நமக்கு அபயம் அளிக்கிறது. அஞ்சாமையைத் தருகிற கந்தப் பெருமானுக்குரிய அலங்காரமாகிய இந்த நூலைப் படிக்கிறவர்கள் அபயத்தைப் பெறுவார்கள். அதற்கு அடுத்தபடி அவர்களுக்கு வரதமும் கிடைக்கும் என்பதைக் குறிப்பால் பெறலாம். உண்மை நிகழ்ச்சி இங்கே என்னுடைய சொந்த அநுபவம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்தப் பாட்டின் கடைசியில் உள்ள, கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் என்பதற்கு விளக்கமாக அந்த நிகழ்ச்சி அமையும் என்று நினைக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் இலங்கைக்குச் சென்றிருந்தேன். பலமுறை அந்த நாட்டுக்குப் போயிருக்கிறேன். இந்த முறை வேலணை என்ற இடத்தில் திருமுறை மகாநாடு நடந்தது; அதில் கலந்துகொள்ளப் போயிருந்தேன். பெரிய கூட்டம். வேலணை என்பது இலங்கையின் வடபகுதியாகிய யாழ்ப்பாணத்தில் இருப்பது. யாழ்பாணத்திலும், கீழ்மாகாண மாகிய மட்டக்களப்பிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்குத் தமிழ் இலக்கியங்களிலும், திருமுறைகளிலும், இலக்கியச் சொற்பொழிவுகளைக் கேட்பதிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. திருமுறை மகாநாடு நடந்தபோது இலங்கை முழுவதிலு 456