பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன் மிருந்து பல அன்பர்கள் வந்து கலந்து கொண்டார்கள். மட்டக் களப்பில் உள்ள தமிழர்களும் வந்து விழாவில் நிகழ்ந்த சொற் பொழிவுகளைக் கேட்டு இன்புற்றார்கள். இலங்கைக்குச் செல்கிறவர்கள் பெரும்பாலும் யாழ்ப் பாணத்தில் பல சொற்பொழிவுகளை நிகழ்த்திவிட்டு இலங்கையின் தலைநகராகிய கொழும்புக்குச் சென்று வந்துவிடுவது வழக்கம். கிழக்குப் பகுதியில் உள்ள மட்டக் களப்புக்குப் போய் அங்குள்ள தமிழர்களைக் கண்டு சொற்பொழிவு ஆற்றி வருவது அரிது. ஆகையால் அங்குள்ள தமிழர்களுக்குக் கொஞ்சம் ஏக்கம் இருக் கும். மட்டக்களப்பாகிய கிழக்கு மாகாணத்தில்தான் திருக்கோண மலை என்ற பாடல் பெற்ற சிவத்தலம் இருக்கிறது. திருமுறை விழா நடந்து கொண்டிருந்தபோது மட்டக் களப்பிலிருந்து வந்த தமிழர்கள் என்னை அணுகி, 'விழா முடிந்தவுடன் நீங்கள் எங்கள் ஊருக்கு வரவேண்டும்; வந்து சொற்பொழிவு ஆற்ற வேண்டும். அங்கே பாடும் மீன்கள் உள்ள வாவி இருக்கிறது' என்றார்கள். நான் வருவதாக ஒப்புக் கொண்டேன். மட்டக்களப்பை முன்னாலே நான் பார்த்தது இல்லை. ஆதலால் அந்த இடத்தைப் பார்க்கும் பயனும் நமக்குக் கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஒப்புக்கொண்டேன். வேலணையில் திருமுறை விழா முடிந்த பிறகு ஒருநாள் புறப்படுவது என்று திட்டமாயிற்று. அன்று அமாவாசை. எனக்கு மிகவும் வேண்டியவரும் என்னுடைய இளைய சகோதரர்போல் இருப்பவரும் ஆகிய இராசேந்திர குருக்கள் என்பவர் யாழ்ப் பாண நகரத்திற்கு அருகில் நீர்வேலி என்ற ஊரில் வாழ்கிறார். எனக்குச் சொந்தமான வீடு ஒன்று அங்கே இருப்பது போலவே நான் கருதுகிறேன். அவரும் அவரது குடும்பத்தினரும் என்னை யும் தம் குடும்பத்தில் ஒருவனாக எண்ணி உபசரிக்கும் பேரன்பு உடையவர்கள். அமாவாசை அன்று அவர் வீடு சென்று நீராடித் தர்ப்பணம் செய்து உணவு கொண்டு அங்கிருந்து மட்டக் களப்புக்குக் காரில் புறப்படலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். எங்களுடைய காரியாலயத்திலிருந்து இலங்கைக்கு ஒர் அன்பர் வந்திருந்தார். அவரையும் துணையாக அழைத்துக் கொண்டு போவதாக உத்தேசம் இருந்தது. குறிப்பிட்ட நாளில் உணவு 457